• Download mobile app
27 Mar 2026, FridayEdition - 3698
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ராகுல் காந்தி மீது நடவடிக்கை எடுக்க கோரி கோவை மாவட்ட ஆட்சியரிடம் பாரதிய ஜனதா கட்சியினர் மனு

December 19, 2018 தண்டோரா குழு

ரஃபேல் விமானம் வாங்கியது தொடர்பாக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராகுல் காந்தியும், அக்கட்சியனரும் தொடர்ந்து பாரதிய ஜனதா கட்சியினர் மீது அவதூறு பரப்புவதாக கூறி ராகுல் காந்தி மீது நடவடிக்கை எடுக்க கோரி கோவை மாவட்ட ஆட்சியரிடம் பாரதிய ஜனதா கட்சியினர் மனு அளித்து உள்ளனர்.

ரஃபேல் போர் விமானங்கள் வாங்க மேற்கொண்டிருக்கும் ஒப்பந்தம் குறித்து உச்சநீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுக்களை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான மூன்று நீதிபதிகளைக் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு தள்ளுபடி செய்துள்ளது. இந்நிலையில் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி மற்றும் அக்கட்சியினர் விமானங்கள் வாங்கியது தொடர்பாக தொடர்ந்து பாரதிய ஜனதா கட்சியின் மீது அவதூறு பரப்புவதாக கூறி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று பாரதிய ஜனதா கட்சியினர் புகார் மனு அளித்தனர்.

மேலும், பாராளுமன்ற உறுப்பினர் பொறுப்பில் இருந்து ராகுல் காந்தியை நீக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.

மேலும் படிக்க