• Download mobile app
17 Mar 2026, TuesdayEdition - 3688
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ரஷ்யாவிலுள்ள 755 அமெரிக்க தூதர அதிகாரிகள் வெளியேற ரஷ்ய அதிபர் உத்தரவு

July 31, 2017 தண்டோரா குழு

ரஷ்யாவிலுள்ள 755 அமெரிக்க தூதர அதிகாரிகள் ரஷ்யாவை விட்டு வெளியேற வேண்டும் என்று ரஷ்யக் குடியரசு தலைவர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, 2016ம் ஆண்டு, அமெரிக்காவில் நடந்த அமெரிக்க குடியரசுத் தலைவர் தேர்தலில், ரஷ்யா நேரடியாக தலையிட்டதாகவும், உக்ரைன், சிரியா ஆகிய நாடுகளில் தனது ராணுவத்தின் மூலம் ஆக்கிரமிப்பு செய்ததாகவும் கூறி அந்த நாட்டின் மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

அமெரிக்காவின் இத்தகைய நடவடிக்கையால் கோபமடைந்துள்ள ரஷ்யா, இதற்கு தக்க பதிலடி கொடுக்கும் விதமாக சில நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அதனால் தான், ரஷ்யாவில் பணியாற்றி வரும் 755 அமெரிக்க தூதரகர்கள் ரஷ்யாவை வீட்டு வெளியேற வேண்டும் என்று முடிவு எடுக்கப்பட்டது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதோடு ரஷ்யாவிலுள்ள“Russia Summer House and Storage facility” என்னும் இரண்டு தூதரங்கள் நாளை(ஆகஸ்ட் 1) முதல் மூடப்படவுள்ளது. அதேபோல், கடந்த டிசம்பர் மாதம், முன்னாள் அமெரிக்க குடியரசுத் தலைவராக இருந்த பாரக் ஒபாமா 35 ரஷ்ய அதிகாரிகளை அமெரிக்காவிலிருந்து வெளியேற்றினார்.வாஷிங்டன் நகரிலுள்ள இரண்டு தூதரங்களை பயன்படுத்தி, ரஷ்யா உளவு பார்க்கிறதாக குற்றம்சாட்டி, அந்த இரண்டு தூதரங்களை மூட உத்தரவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க