• Download mobile app
23 Jul 2026, ThursdayEdition - 3816
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ரயிலில் கடத்தி வரப்பட்ட 1 டன் புகையிலை பொருட்கள் – 3 பேர் கைது

December 13, 2022 தண்டோரா குழு

கோவை ரயில் நிலையம் பின் பகுதியில் உள்ள குட்செட் சாலையில் நேற்று உக்கடம் போலீசார் ஆட்டோவை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் 1 டன் அளவில் இருந்தது. இதையடுத்து ஆட்டோவில் இருந்த 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள் உக்கடம் ஜி.எம். நகரை சேர்ந்த அபுதாஹீர் (45), காளப்பநாயக்கன்பாளையத்தை சேர்ந்த ஐசக் (35), ராம்பிரபு (40) என்பது தெரியவந்தது. மேலும் ரயிலில் கொண்டு வரப்பட்ட இந்த புகையிலைபொருட்களை விற்பனைக்காக அவர்கள் கொண்டு சென்றது தெரியவந்தது. இதையடுத்து இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

மேலும் இந்த புகையிலை பொருட்களை எங்கிருந்து கடத்தி கொண்டு வந்தனர், யாருக்கு விற்பனை செய்ய கொண்டு சென்றனர், இந்த கடத்தல் சம்பவத்தில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க