• Download mobile app
08 May 2026, FridayEdition - 3740
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ரஜினி – கமல் இருவரும் விரைவில் சந்திக்கவுள்ளனர்

January 2, 2018 தண்டோரா குழு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எப்போது அரசியலுக்கு வருகிறார் என்பதற்கு முற்றுப்புள்ளி வைத்து தன் அரசியல் பிரவேசத்தை ரஜினி அறிவித்தார்.அரசியலுக்கு வருவதை உறுதி செய்து, அதற்கான ஆரம்பகட்ட பணிகளையும் தொடங்கிவிட்டார்.

உலக நாயகன் கமல்ஹாசனும் ஏற்கனவே அரசியலுக்கு வருவதை உறுதி செய்துவிட்டார். எனினும்
கமல் எந்த நேரமும் தன்னுடைய கட்சி குறித்த அறிவிப்பை வெளியிட வாய்ப்பு உள்ளது.

இந்நிலையில் வரும் 6ஆம் தேதி மலேசியாவில் நடைபெறும் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் நட்சத்திரக் கலைவிழாவில் ரஜினி, கமல் இருவரும் பங்கேற்க உள்ளனர்.

ரஜினியின் அரசியல் அறிவிப்புக்குப் பின்னர் ரஜினி-கமல் கலந்து கொள்ளும் முதல் விழா என்பதால் இந்த விழாவில் இருவரது பேச்சிலும் அரசியல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கு முன்னர் ரஜினி-கமல் கலந்து கொண்ட சிவாஜி கணேசன் மணிமண்டப திறப்பு விழாவில் இருவருமே அரசியல் குறித்து பேசினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதைவிட இந்த விழாவில் அரசியல் கருத்துக்கள் அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க