• Download mobile app
28 Mar 2026, SaturdayEdition - 3699
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ரஜினிகாந்த் நலமாக உள்ளார் வதந்திகளை நம்ப வேண்டாம் – ரஜினி தரப்பு

November 23, 2018 தண்டோரா குழு

ரஜினிகாந்த் நலமாக உள்ளார், ரஜினியின் உடல்நலம் குறித்து வரும் தகவல்களை நம்ப வேண்டாம் என ரஜினியின் மக்கள் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள 2.0 திரைப்படம் வரும் 28ம் தேதி வெளியாகவுள்ளது.ரஜினி ரசிகர்கள் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுகாக உதவி புரிந்து வருகின்றனர். இதற்கிடையில் ரஜினிகாந்த் உடல்நலம் பாதிக்கப்பட்டிருப்பதாக சமூக வலைதளங்களில் வதந்தி பரவியது. இதனால் ரஜினி ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்நிலையில், ரஜினிகாந்த் உடல்நிலை குறித்து வெளியான தகவல்கள் தவறு என்றும், அவர் நலமாக உள்ளார் என்றும் வதந்திகளை யாரும் நம்பவேண்டாம் என்றும் ரஜினிகாந்த் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க