• Download mobile app
01 Nov 2025, SaturdayEdition - 3552
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ரக்க்ஷா பந்தன் பரிசாக கழிவறையை கட்டிக்கொடுத்த இளைஞர்கள்

July 31, 2017 தண்டோரா குழு

உத்தர பிரதேச இளைஞர்கள் தங்கள் சகோதரிகளுக்கு ரக்க்ஷா பந்தன் பரிசாக கழிவறையை கட்டிக்கொடுத்த சம்பவம் பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்திய மற்றும் நேபாளில் ஒவ்வொரு ஆண்டும் சகோதரன் மற்றும் சகோதரிகளின் அன்பை பரிமாறும் ‘ரக்க்ஷா பந்தன்’ விழா, ஆகஸ்ட் மாதத்தில் கோலாகலமாக கொண்டாப்படுகிறது.

அந்த விழாவின்போது சகோதரி தன்னுடைய உடன் பிறந்த சகோதரன் மற்றுமல்லாமல் உடன் பிறவாத சகோதரன் மணிக்கட்டில் ஒரு மஞ்சள் கயிறை கட்டி தனது அன்பை தெரிவிப்பாள். சகோதரனும் தன்னுடைய அன்பை காட்ட, அவளுக்கு ஒரு அன்பளிப்பை வழங்குவது வழக்கம்.
இவ்வாண்டு, அந்த விழா வரும் ஆகஸ்ட் மாதம் 7ம் தேதி கொண்டாடப்படவுள்ளது.

உத்தரபிரதேஷ் மாநிலத்தின் அமேதி மாவட்டத்தில் உள்ள இளைஞர்கள் தங்கள் சகோதரிக்கு ரக்க்ஷா பந்தன் பரிசாக கழிவறையை கட்டிக்கொடுத்துள்ளனர். அம்மாவட்டத்தில் பெண்களுக்கு சுகாதாரத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில், பெண்கள் திறந்த வெளியில் மலம் கழிப்பதை தடுத்து, விழிப்புணர்வு ஏற்படுத்த “Anokhi Amethi Ka Anokha Bhai” என்னும் பிரச்சாரத்தை “Zila Swachchata Samiti” தொடங்கியுள்ளது.

அந்த மாவட்டத்தின் பல்வேறு இடங்களை சேர்ந்த சுமார் 854 இளைஞர்கள் ஒன்றுச் சேர்ந்து, ரக்க்ஷா பந்தன் பரிசாக தங்கள் சகோதரிகளுக்கு தங்கள் சொந்த செலவில் கழிவறையை கட்டிக்கொடுத்துள்ளனர். இந்த மாவட்டத்தில் கிட்டத்தட்ட 854 ஆண்கள் இதில் பதிவு செய்துள்ளனர். அவர்களின் பெயரை ரக்‌ஷா பந்தன் அன்று மூன்று நபர்களை குழுக்கல் முறையில் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு தலா ரூ. 50,000 கொடுக்க அந்த கமிட்டி முடிவு செய்துள்ளது.

இந்த கமிட்டியில் மாவட்ட நீதிபதி, தலைமை மேம்பாட்டு அதிகாரி மற்றும் டிபிஆர்ஓ அடங்கியோர் இருப்பார்கள்.

மேலும் படிக்க