• Download mobile app
08 May 2026, FridayEdition - 3740
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மொபைல் எண் இலக்கம் 13க்கு மாறுகிறதா?

February 21, 2018 தண்டோரா குழு

மொபைல் எண்களை 13 இலக்கமாக மாற்றும் திட்டம் ஏதும் இல்லை என்று தொலைத்தொடர்புத்துறை விளக்கம் அளித்துள்ளது.

இந்தியாவில் செயல்படும் அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கும் தொலைத்தொடர்புத் துறை கடந்த ஜனவரியில் அனுப்பிய சுற்றறிக்கையில்,  இனி புதிதாக அளிக்கப்படும் அனைத்து மொபைல் எண்களும் (M2M) 10 இலக்கங்களுக்கு பதிலாக 13 இலக்கமாகமாற்றப்படவேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.கூடுதல் பாதுகாப்பு அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த முன்னெடுப்பை நடவடிக்கையை தொலைதொடர்புத் துறை எடுத்துள்ளது. இதனால், இனி நாம் பயன்படுத்தும் 10 இலக்க மொபைல் எண்கள் இனி 13 இலக்க எண்ணாக மாறுமா என பொதுமக்களிடையே சந்தேகம் எழுந்துள்ளது.

இந்நிலையில், அப்படிப்பட்ட திட்டம் ஏதும் இல்லை என தொலைத்தொடர்புத் துறை விளக்கம் அளித்துள்ளது. தொழிற்துறை பயன்பாடுகளுக்கான Smart Metering, Asset Tracking Solutions, Equipment Monitoring Solutions போன்ற சிம் அடிப்படையிலான எம்2எம் சாதனங்களுக்கு மட்டுமே 13 இலக்க எண் வழங்கப்பட உள்ளதாகவும், வழக்கமான மொபைல் பயன்பாடுகளுக்கு 10 இலக்க எண்களே தொடரும் என தொலைத்தொடர்புத்துறை தெரிவித்துள்ளது.

 

 

 

 

மேலும் படிக்க