• Download mobile app
07 Sep 2026, MondayEdition - 3862
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மேம்பாலங்களில் 40 கிலோ மீட்டர் வேகத்தில் தான் வாகனங்களை இயக்க வேண்டும் – கோவை கமிஷனர்

June 17, 2022 தண்டோரா குழு

கோவை-திருச்சி சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக ரெயின்போ காலனி முதல் பங்குச்சந்தை கட்டிடம் வரை மேம்பாலம் கட்டப்பட்டது. இந்த மேம்பாலத்தில் கடந்த 12-ந் தேதி மாலை ரெயின்போ காலனியில் இருந்து ராமநாதபுரம் சிக்னல் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்ற பிரசாந்த் (வயது 28) என்பவர் மேம்பால சுவரில் மோதி உயிரிழந்தார்.

இது போன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நடக்காமல் தடுக்க உரிய முன்எச்சரிக்கை நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவிட்டார்.அதன்படி போக்குவரத்து துணை கமிஷனர் மதிவாணன், உதவி கமிஷனர் ராஜூ, சரவணன்,இன்ஸ்பெக்டர் வேல்முருகன், நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்டப் பொறியாளர் முரளிகுமார் ஆகியோர், சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.

இதையடுத்து விபத்து நடக்காமல் தடுக்க, திருச்சி ரோடு உயர் மட்ட பாலத்தில் தற்காலிகமாக ஒளிரும் பட்டையுடன் கூடிய இரும்பு தடுப்புகள் (பேரி கார்டு) வைக்கப்பட்டது.

இது குறித்து போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் கூறியதாவது;

மேம்பாலங்களில் விபத்து ஏற்படுவதை தடுக்க தேவையான இடங்களில் எச்சரிக்கை பலகைகள் வைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கோவையில் உள்ள மேம்பாலங்களில் 40 கிலோ மீட்டர் வேகத்தில் தான் வாகனங்களை இயக்க வேண்டும்.

கோவை-திருச்சி ரோடு மேம்பாலத்தில் உக்கடம் பைபாஸ் சாலையில் மேம்பாலத்தின் இறங்குதளம் அமைக்கப்பட்டு உள்ளது. அதில் எதிர்திசையில் வாகனங்களில் செல்ல கூடாது.பாலத்தில் நேராக செல்லும் சாலையில் 40 கிலோ மீட்டர் வேகத்திலும், வலைவுகளில் 30 கிலோ மீட்டர் வேகத்திலும் மட்டுமே செல்ல வேண்டும், என்றார்.

மேலும் படிக்க