July 24, 2017
தண்டோரா குழு
கர்நாடக மாநிலம்காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் உள்ள அணைகளான கபினி, கிருஷ்ணராஜசாகர்பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால்இந்த இரு அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரித்து உள்ளது.
இதன் காரணமாக காவிரி ஆற்றில் திறந்து விடப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. நீரின் அளவு அதிகாரிப்பு காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.
மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,200 கனஅடி வீதம் நீர் தற்போது நீர் திறந்து விடப்படுகிறது. அணையின் உள்ள நீரின் தற்போதைய அளவு 26அடியாக உள்ளது. நீர்வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் அணை நீர்மட்டம் உயர வாய்ப்பு உள்ளது.