• Download mobile app
22 Jun 2026, MondayEdition - 3785
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மேகதாது விவகாரம் : அதிமுக எம்.பி.க்கள் அமளியால் மாநிலங்களவை நாளை வரை ஒத்திவைப்பு

December 13, 2018 தண்டோரா குழு

மேகதாது விவகாரம் தொடர்பாக அதிமுக எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டதால் மாநிலங்களவை நாளை வரை ஒத்திவைக்கப்பட்டது.

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு ஆர்வம் காட்டி வருகிறது. கர்நாடக அரசின் முயற்சிக்கு உதுவும் வகையில் மேகதாது பகுதியில் புதிய அணை கட்டும் கர்நாடக அரசின் வரைவு திட்ட அறிக்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. மத்திய அரசின் இந்த செயல்பாடு தமிழக மக்களிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உச்ச நீதிமன்றத்தில்வழக்கு தொடர்ந்துள்ளது.

இதன் தொடர்ச்சியாக இந்த பிரச்சினையை நேற்று நாடாளுமன்றத்திலும் தமிழக எம்.பி.க்கள் எழுப்பினர். இதையடுத்து, இன்று காலை சபை தொடங்கியதும் அ.தி.மு.க. எம்.பி.க்கள் சபையின் மையப்பகுதிக்கு சென்று இந்த பிரச்சினையை எழுப்பினர். கூட்டம் ஆரம்பித்த சிறிது நேரத்தில் இது தொடர்பான அமளியில் அ.தி.மு.க வினர் ஈடுபட்டனர். இருக்கையை முற்றுகையிட்டு கோஷங்கள் எழுப்பினர்.

இதனால் இன்று முழுவதும் மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, நாடாளுமன்ற அலுவலகத்தில் அ.தி.மு.க எம்.பி கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க