• Download mobile app
12 Jun 2026, FridayEdition - 3775
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மெரீனா கடற்கரையில் போராட்டகாரர்கள் வெளியேற்றம்

January 23, 2017 தண்டோரா குழு

சென்னை மெரீனா கடற்கரையில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்த நிரந்தர சட்டம் கொண்டு வரக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்களை, மக்களைக் காவல் துறையினர் வலுக்கட்டாயமாக வெளியேற்றி வருகின்றனர்.

தமிழகத்தில் இனிவரும் காலங்களில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்த நிரந்தர சட்டம் கொண்டு வரவேண்டும். பீட்டா அமைப்பைத் தடை செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பல்வேறு தரப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்த தமிழக அரசாங்கம் அவரசச் சட்டம் கொண்டு வந்துள்ளது.

திங்கள்கிழமை கூடிய சட்டப் பேரவைக் கூட்டத்தில் அந்த அவசரச் சட்டத்தைச் சட்டமாக நிறைவேற்றுவதற்கு வகை செய்யும் சட்ட முன்வடிவு (மசோதா) அறிமுகம் செய்யப்பட்டது.
இதனிடையில், போராட்டத்திற்கான குறிக்கோள் நிறைவேற்றப்பட்டதால், சென்னை மெரீனா கடற்கரையில் குவிந்துள்ள போராட்டக்காரர்களை அமைதியான முறையில் கலைந்து செல்லுமாறு ‌ காவல்துறை திங்கள்கிழமை காலையில் வேண்டுகோள் விடுத்தது.

இது குறித்து சென்னை காவல்துறை வெளியிட்ட அறிக்கையில், “போராட்டத்திற்கான நோக்கங்கள் நிறைவேறி விட்டதால் போராட்டக்காரர்கள் உடனடியாகக் கலைந்து செல்லும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால், ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவகதற்கு நிரந்தரமாக சட்டம் கொண்டுவரப்படும் வரை போராட்டம் தொடரும் என போராட்டக்காரர்கள் கூறினர்.

இதனை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தாங்களாகவே கலைந்து செல்ல இளைஞர்களுக்கு காவல்துறை மீண்டும் அறிவுறுத்தியது. போராட்டக்காரர்கள் கலைவதற்கு மறுத்ததை அடுத்து காவல்துறையினர் அவர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது.

இதனால், போராட்டத்தில் பங்கேற்ற இளைஞர்கள் கடலை நோக்கி சென்று கடலில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக சென்னை பட்டினப்பாக்கம் மக்களும் அவர்களுடன் கடலில் இறங்கி போராடி வருகின்றனர்.

மேலும் படிக்க