• Download mobile app
23 Jul 2026, ThursdayEdition - 3816
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மூன்று வருடங்களாக மூக்கில் மூச்சு விட முடியாமல் அவதிப்படும் இளம் பெண் – ஆட்சியரிடம் மனு

December 12, 2022 தண்டோரா குழு

கோவை சவுரிபாளையம் அண்ணா நகரை சேர்ந்த சோபியா என்பவர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தார்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது,

எனக்கு தைராய்டு அறுவை சிகிச்சை செய்வதற்காக கோவை இ. எஸ்.ஐ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டேன்.
பின்னர் எனக்கு டாக்டர்கள் அறுவை சிகிச்சை மேற்கொண்டனர்.அறுவை சிகிச்சை செய்த அன்று எனக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. டாக்டர்கள் எனக்கு மூச்சு விட வேண்டி கழுத்தில் ஒரு குழாய் அமைத்தனர்.

அதன் பின்னர் என்னால் மூக்கு வழியாக சுவாசிக்க முடியவில்லை. இது பற்றி டாக்டர்களிடம் கேட்டபோது மூச்சு குழாயில் உள்ள நரம்பு அறுந்து விட்டது 3 மாதத்தில் சரியாகிவிடும் என்று கூறினர் ஆனால் என்னால் கழுத்தில் குழாய் அமைத்ததால் பேச முடியவில்லை.

கடந்த 3 வருடங்களாக இதனால மிகவும் கஷ்டப்பட்டு வருகிறேன். எனக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.எனது கணவர் கூலி வேலை செய்து வருகிறார். கழுத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சனையால் என்னால் வேலைக்கு செல்ல முடியாமல் குடும்பம் நடத்த கஷ்டப்பட்டு வருகிறேன். எனவே கலெக்டர் தக்க நடவடிக்கை எடுத்து எனக்கு மருத்துவ உதவியை செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

மேலும் படிக்க