அமெரிக்காவில் படுக்கை அறையில் இருந்த மூட்டை பூச்சிகளை அழிப்பதற்காக தீ வைத்தபோது, எதிர்பாராதவிதமாக வீடு முழுவதும் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அமெரிக்காவின் கன்சாஸ் நகரிலுள்ள டோபேகா என்னும் இடத்தில் அவுஸ்டா ஸ்காட் என்பவர் தனது தாய் மோனிக் மற்றும் தனது 2 மகளுடன் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்துள்ளார்.அவர் இரவு படுக்க சென்ற போது ,தனது படுக்கை அறையில் மூட்டைப்பூச்சி இருப்பதை பார்த்துள்ளார். உடனே அதை சிகரெட் லைட்டரை பயன்படுத்தி கொன்றுள்ளார். இதனையடுத்து மெத்தையில் மூட்டைப்பூச்சிகள் இருப்பதை பார்த்துள்ளார். மீண்டும் சிகரட் லைட்டரை பயன்படுத்தி அவற்றை அழிக்க முயன்றபோது, பஞ்சு மெத்தையில் தீ விழுந்து, அந்த அறை முழுவதும் தீ பற்றியுள்ளது.
முதலில் தீயை அனைக்க முயன்றுள்ளார், ஆனால் தீ வேகமாக பரவ தொடங்கியதும் தனது தாயார் மற்றும் குழந்தையுடன் வீட்டைவிட்டு வெளிய வந்துள்ளார். அருகில் இருந்தவர்களுக்கு தீ விபத்து குறித்து தகவல் தந்துள்ளார். இந்த செய்தியை அறிந்த அந்த குடியிருப்பு வாசிகள், வீட்டைவிட்டு வெளியேறி சாலைக்கு வந்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து டோபேகா தீயணைப்பு வீரர்களுக்கு தெரிய வந்துள்ளது. சம்பவ இடத்திற்கு வந்த அவர்கள் தீயை அணைத்துள்ளனர். தீயின் புகையால் பாதிக்கப்பட்ட 13 பெரியவர்கள் மற்றும் நான்கு குழந்தைகளை அருகிலுள்ள மருத்துவமனனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். மருத்துவர்கள் அவர்களுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த விபத்து காரணமாக அந்த குடியிருப்பில் சேதம் அடைந்த பொருட்களின் மதிப்பு சுமார் 140,000 டாலர் இருக்கும் என்று கருதப்படுகிறது.
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு
ஷாலினி வாரியரை புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமித்தது கோஸ்ரீ ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம்
இந்தியாவிலேயே முதன் முறையாக உக்கடம் பகுதியில் சிங்க முகங்களுடன் வெண்கல அசோக தூண் திறப்பு
கோவை வடக்கு மாவட்ட கரும்புக்கடை பகுதி திமுக சார்பில் 4ம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்