• Download mobile app
09 Sep 2025, TuesdayEdition - 3499
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மூடநம்பிக்கையால் கால்பந்துப் போட்டியில் வெற்றி!

August 11, 2017 தண்டோரா குழு

சீனாவில் கால்பந்து விளையாட்டு மைதானத்தையும், சீருடையையும் தங்க நிறத்திற்கு மாற்றினால், கால்பந்து போட்டியில் வெற்றி கிடைக்கும் என்ற மூடநம்பிக்கையால் மைதானத்தையும் சீருடையும் மாற்றியதால், போட்டியில் வெற்றியும் கிடைத்துள்ளது.

சீனாவின் Chinese Super League யில் மொத்தம் 16 அணிகள் உண்டு. அந்த 16 அணிகளில் Guangzhou Evergrande அணி முன்னிலை வகிக்கிறது.

Guangzhou Evergrande கால்பந்து அணியின் சீருடை நீல நிறம் ஆகும். அவர்களுடைய சீருடையையும், கால்பந்து மைதானத்தையும் தங்க நிறத்தில் மாற்றினால், கால்பந்து போட்டியில், அதிக வெற்றி கிடைக்கும் என்று அந்த அணி நிர்வாகம் நம்பியது.

இந்த மூட நம்பிக்கையால், தென் சீனாவில் 20,000 பேர் அமர்ந்து போட்டியை பார்க்கக்கூடிய யூஎக்சியுஷன் கால்பந்து மைதானத்தை தங்க நிறத்தால் வண்ணம் பூசினர்.Guangzhou Evergrande அணியின் சீருடையையும் தங்க நிறத்திற்கு மாற்றினர்கள்.

அந்த புதிய சீருடையை அணிந்துக்கொண்டு,கடந்த புதன்கிழமை நடைபெற்ற கால்பந்து போட்டியில் Guangzhou Evergrande அணி கலந்துக்கொண்டனர். என்ன ஆச்சரியம், அந்த போட்டியில் Jiangsu Suning அணியை 4-2 என்னும் கோல் கணக்கில் அணி வெற்றி பெற்றது. அதை தொடர்ந்து நடந்த போட்டியிலும் அந்த அணி தொடர்ந்து வெற்றியை பெற்றது.

Guangzhou Evergrandeஅணியின் சீருடையை தங்க நிறத்திற்கு மாற்றியதால், அந்த அணி விளையாடிய அனைத்துப் போட்டிகளிலும் வெற்றி வாகை சூடியது” என்று அந்த அணியின் பயிற்சியாளர் தெரிவித்தார்.

மேலும் படிக்க