• Download mobile app
08 May 2026, FridayEdition - 3740
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் கைது

February 28, 2018 தண்டோரா குழு

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் இன்று(பிப் 28)கைது செய்யப்பட்டார்.

அந்நிய முதலீடுக்கான அனுமதி பெற்றுத்தர ஐஎன்எக்ஸ் நிறுவனத்திடம் ரூ. 10 லட்சம் பெற்றதாக கார்த்தி சிதம்பரத்தை சென்னையில் சிபிஐ போலீசார் இன்று கைது செய்தனர்.

இது தொடர்பாக கடந்த ஜனவரி மாதம் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோரின் வீடுகளில் சிபிஐ அதிகாரிகள் சோதனை செய்தனர்.  இதனையடுத்து, கார்த்தி சிதம்பரம் வெளிநாடுகளுக்குச் செல்ல தடைவிதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இன்று சென்னையில் சிபிஐ போலீசார் கார்த்தி சிதம்பரத்தை கைது செய்தனர். இதே விவகாரத்தில் கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கர ராமன் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க