• Download mobile app
26 Jul 2026, SundayEdition - 3819
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

முன்னாள் அமைச்சர் தங்கமணியின் உறவினருக்கு சொந்தமான இடத்தில் கோவையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

December 15, 2021 தண்டோரா குழு

முன்னாள் அமைச்சர் தங்கமணி மற்றும் அவருடைய உறவினர்கள் அவருக்கு நெருக்கமானவர்கள் என மொத்தம் அறுபத்தி ஒன்பது இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்

இந்த நிலையில் கோவையிலும் முன்னாள் அமைச்சர் தங்கமணி நெருக்கமானவர்கள் மற்றும் அவருடைய உறவினர்கள் நடத்திவரும் கடைகள் மற்றும் நிறுவனங்களில் போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். கோவை சாய்பாபா காலனி கே கே புதூர் பகுதியில் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு முன்னாள் அமைச்சர் தங்கமணியின் உறவினருக்கு சொந்தமான indware என்னும் டைல்ஸ் நிறுவனம் மற்றும் ஜெயஸ்ரீ பிளைவுட் ஸ் ஆகியவை செயல்பட்டு வந்தது.

இந்த நிலையில் அந்த நிறுவனம் செயல்பட்டு வந்த இடத்தில் 8 பேர் அடங்கிய லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் படிக்க