புதுதில்லியின் கேளிக்கை விடுதியில் ஒரு இளம்பெண் அதிரடி பாதுகாவலராக பணியாற்றி வருவது பலருக்கு ஆச்சரியத்தை அளித்துள்ளது.
புதுதில்லியில் உள்ள கேளிக்கை விடுதியில் ‘பௌன்சர்’ என்று அழைக்கப்படும் அதிரடி பாதுகாவலர்கள் பணியாற்றி வருவது வழக்கம். மேஹரூனிசா என்னும் இளம் பெண் பாரம்பரிய முஸ்லிம் குடும்பத்தை சேர்ந்த அவர் ராணுவத்தில் அல்லது காவல்துறையில் சேரவேண்டும் என்று விருப்பம். ஆனால், அவருடைய கனவு நனவாகவில்லை. இதையடுத்து அந்த கேளிக்கை விடுதியில் பணியாற்றி வருகிறார்.
அந்த விடுதியின் மதுபான கூடத்தில் நடைபெறும் சண்டையை சமாளிப்பது, அங்கு வருவோரை சோதனை செய்யும்போது, போதை பொருட்களை இருப்பதை அறிந்தால், அவர்களை தடுத்து நிறுத்துவது போன்ற பணிகளை செய்து வருகிறார்.
அவருடைய 27 வயது சகோதரி தரனும் ஒரு அதிரடி பாதுகாவலர். மேஹரூனிசா பணி புரியும் விடுதிக்கு அருகில் அவருடைய சகோதரியும் பணிபுரிகிறார். இருவருக்கும் ஒரு மாதத்திற்கு 3௦,௦௦௦ ரூபாய் வருமானமும் கிடைக்கிறது. இருவரும் தங்கள் பணிகளில் சிறந்து விளங்குகின்றனர்.
விடுதிக்கு வரும் பெண்களுக்கு பாதுகாப்பு தரவேண்டும் என்று பெண் காவலர்களை பணியில் அமர்த்தினோம். அந்த பணிக்கு மேஹரூனிசா ஏற்ற ஒருவர் என்று அந்த விடுதியின் உரிமையாளர் தெரிவித்தார்.
கோவை மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் – 45 மனுக்கள் மீது சுமூகமான தீர்வு
கோவையில் அன்னையர் நினைவாக, தாய்மையை போற்றும் விதமாக தாய் – சேய் சிலை திறப்பு
தமிழ்நாட்டில் தனது மூன்று சக்கர மின்சார வாகனமான டிவிஎஸ் கிங் இவி மேக்ஸ் – டிவிஎஸ் மோட்டார் அறிமுகம்
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு