• Download mobile app
25 Apr 2024, ThursdayEdition - 2997
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

முதல் டார்கெட் இப்பொழுது நான் தான் – அமைச்சர் எஸ்.பி வேலுமணி

March 11, 2020

கோவை விமான நிலையத்தில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது பேசிய அவர்,

கோவை மாவட்டத்திற்கு வ.உ.சி. பூங்கா விரிவாக்கத்திற்கு வனத்துறை மானியக்கோரிக்கையின் போது பேசி உள்ளோம். முழு ஒத்துழைப்பு கொடுப்பதாக முதல்வர், வனத்துறை அமைச்சர் உறுதி அளித்துள்ளனர். கோவை வ.உ.சி. பூங்காவில் முன்னர் இருந்தது போன்று வன உயிரியல் பூங்கா, மைசூரில் இருப்பதை போல் சிங்கம், புலி போன்ற பல்வேறு மிருகங்களை விதிமுறைக்கு உட்பட்டு வழங்குவதற்கும், விரிவாக்கம் செய்வதற்கு ஒப்புதல் வழங்கி உள்ளனர். பழமையான உயிரியல் பூங்காவான கோவை வ.உ.சி. பூங்காவை மத்திய அரசு நிறுத்தக்கூடிய முயற்சியை , மாநகராட்சி தடுத்து நடவடிக்கை எடுத்தது. கோவை தேவையான சுற்றுலா தளமாக அமையும் வகையில் திட்டத்தை வழங்க ஒப்புதல் வழங்கி உள்ளனர்.

ஆர்.எஸ்.பாரதி நீதித்துறை மட்டுமின்றி பத்திரிக்கையாளர்கள் குறித்தும் அவதூறாக பேசி உள்ளார். தொடர்ந்து இதுபோன்ற மோசமான போக்கிற்கு திமுக தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான ஸ்டாலின் எதுவும் பேசவில்லை. முதல்வர், அரசு மீது பொய் வழக்கு போட்டு வருகிறார். ஸ்டாலின், காழ்ப்புணர்ச்சி காரணமாக பேசி வருகிறார். என்னுடைய வழக்கு 13ஆம் தேதி வழக்கு வருகிறது. தவறான செய்தியை சமூக வலைத்தளங்களில், திமுக ஐ.டி.விங்க், ஆர்.எஸ்.பாரதி போன்றோர் மூலம் ஸ்டாலின் கசிய விடுகிறார். முதல் டார்கெட் இப்பொழுது நான் தான்.

13ஆம் தேதி முதல் ஒரு வாரம் வரை என்னைப்பற்றி சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்ப தயாராக உள்ளதாக கேள்விப்படுகிறேன். என் மீது எந்த குற்றச்சாட்டு வேண்டுமானாலும் சொல்லட்டும். ஆனால், பத்திரிகை, நீதித்துறை விமர்சிக்க வேண்டாம். இன்னும் பல வளர்ச்சி திட்டங்களை கொண்டு வரவுள்ளோம். ஆர்.எஸ்.பாரதி அவதூறாக பேசுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும். ஸ்டாலின் சொல்லி முதல்வர், என் மீது, தங்கமணி மீது ஆர்.எஸ்.பாரதி பொய் வழக்கு போட்டு வருகிறார்.
3 ஆண்டுகள் மீது சிறப்பான ஆட்சி நடத்தி வருவதால் காழ்ப்புணர்ச்சி காரணமாக இப்படி செய்து வருகிறார். என் மீது தான் அதிக வழக்கு, அதற்கு என்ன காரணம் என்னவென்றால், நான் தான் ஓ.பி.எஸ். இணைப்பு, இரட்டை இலை சின்னம் மீட்பதற்கு நானும், தங்கமணி செய்தோம், தேர்தல் கூட்டணி நாளை அமைப்பதற்கும், இருப்பதால் தான். எத்தனை வழக்கு போட்டாலும் முதல்வருக்கு விஸ்வாசமாக இருப்போம்.கோதாவரி-காவிரி இணைப்பு திட்டம் தொடர்பாக முதல்வர் அறிவுறுத்தலின் படி, நானும், அமைச்சர் ஜெயக்குமாரும் ஆந்திரா, தெலுங்கானாவிற்கு சென்றோம். தெலுங்கானா முதல்வர் முழு ஒத்துழைப்பு 100% தருவதாக தெரிவித்தார். அதற்கு, உறுதுணையாக தெலுங்கானா ஆளுநர் தமிழிசை முழு ஒத்துழைப்பு கொடுத்ததற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

எம்.சேண்ட் ஊழல், 32 கோடி ரூபாய் தான் அதன் அளவு, சரியாக செய்துள்ளனர். ஆனால் ஆயிரம் கோடி என்று பரப்புகின்றனர். ஆங்கில ஊடகங்கள் இதை பாணியாகவே செய்கின்றனர். திட்டங்களை சொல்லமால் ஸ்டாலின் முதல்வரை குறை சொல்கின்றார். புதிதாக ஒருத்தரை வேறு அழைத்து வந்துள்ளனர். ஆதாரமில்லாமல் தான் வழக்கு போடுகின்றனர். நாடாளுமன்ற தேர்தலில் தவறான வாக்குறுதிகள் அடிப்படையில் தான் திமுக வெற்றிப்பெற்றனர்; அதன் பிறகு மக்கள் உணர்ந்து, நாங்குநேரி, விக்கிரவாண்டி தேர்தலில் வெற்றிப்பெற வைத்தார்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் படிக்க