• Download mobile app
22 Jun 2026, MondayEdition - 3785
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

முதல்வர் எடப்பாடி பழனிசாமி எம்எல்ஏ கருணாஸ் திடீர் சந்திப்பு !

January 2, 2019 தண்டோரா குழு

முதல்வர் மற்றும் அரசுக்கு எதிராக பல்வேறு கருத்துக்களை கூறிவந்த எம்எல்ஏ கருணாஸ், இன்று தலைமை செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்தார்.

கடந்த ஆண்டு வரை முதலமைச்சரை கடுமையாக விமர்சித்து வந்தார் கருணாஸ் சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரக்கோரிய மனுவை வாபஸ் பெற்றதையடுத்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை எம்எல்ஏ கருணாஸ் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் சந்தித்தார். பின்னர் முதல்வருக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து, சிவகங்கையில் மருது பாண்டியர் சிலை அமைக்க இடம் ஒதுக்கக்கோரி முதலமைச்சர் பழனிசாமியிடம் கருணாஸ் மனு அளித்தார்.

பின்னர், தனியார் தொலைகாட்சிக்கு பேட்டியளித்த அவர்,

தோல்வியடையும் என்பதால் சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை திரும்பப் பெற்றேன். திருவாடானை தொகுதியில் கண்மாய்களை தூர்வாரக்கோரி முதலமைச்சரை சந்தித்தேன். மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்க தேவரின் பெயரை வைக்க கோரிக்கை விடுத்தேன். தனிப்பட்ட காரணங்களுக்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்திக்கவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க