• Download mobile app
09 Sep 2025, TuesdayEdition - 3499
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

முட்டை ஊழல் அம்பலம் – கமல்

August 1, 2017 தண்டோரா குழு

பெரம்பலூரில் உள்ள அரசு பள்ளியில் கமல்ஹாசன் நற்பணி இயக்கத்தினர் மேற்கொண்ட ஆய்வின் போது சத்துணவு முட்டை ஊழல் அம்பலமானது.

நடிகர் கமல்ஹாசன் தமிழக அரசு மீதும் அமைச்சர்கள் மீதும் தொடர்ந்து டுவிட்டரில் ஊழல் குற்றச்சாட்டை முன் வைத்து வருகிறார்.அதற்கு பதிலளித்த அமைச்சர்கள் உரிய ஆதாரத்துடன் கமல் பேசவேண்டும் என கூறிவந்தனர். இதற்கிடையில் அரசு துறை ஊழலை அம்பலப்படுத்துங்கள் என கமல் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியிருந்தார்.

இந்நிலையில், பெரம்பலூர், வேந்தம்பட்டை, குன்னம் அங்கானவாடிகளில் கமல் ரசிகர் மன்றத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, சாதிக் பாட்ஷா ஆகியோர் கடந்த 24ம் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது மாணவர்களுக்கு அழுகிய முட்டை வழங்கியது தெரியவந்தது. இதனையடுத்து அவர்கள் மாவட்ட நிர்வாகத்திடம் புகார் தெரிவித்த போது இதனை பெரிதுபடுத்த வேண்டாம் என கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, இந்த விவகாரம் குறித்து கமல் தனது டுவிட்டர் பக்கத்தில்,

பெரம்பலூரில் அம்பலமான முட்டை ஊழல் இயக்கத்திற்கு பெருமையே. எனினும் இயக்க வக்கீல்களின் ஆலோசனைப்படி செயல்படவும். சட்டமீறல் நம் தரப்பில் கூடாது.எனக் கூறியுள்ளார்.

மேலும் படிக்க