• Download mobile app
05 Jun 2026, FridayEdition - 3768
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

முட்டையில் வைரக்கல் இங்கிலாந்து பெண்ணிற்கு அடித்தது அதிர்ஷ்டம் !!

March 29, 2017 தண்டோரா குழு

அதிர்ஷ்டம் என்பது எப்போது யாருக்கு எந்த ரூபத்தில் வரும் என்று யாரும் தெரியாது. அப்படிப்பட்ட அதிர்ஷ்டம் இங்கிலாந்தில் உள்ள பெண் ஒருவருக்கு முட்டை மூலம் வந்திருகிறது.

ஆம்! இங்கிலாந்தில் முட்டை சாப்பிட்ட பெண் ஒருவருக்கு முட்டையிலிருந்து வைரக்கல் கிடைத்துள்ளது.

இங்கிலாந்து நாட்டை சேர்ந்தவர் சேலி தாம்சன். இவர் காலை உணவாக அவித்த கோழி முட்டைகளைச் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது அவரது பல்லில் கல் ஒன்று சிக்கியுள்ளது. அதை துளாவி எடுத்து பார்த்த அவருக்கு ஆச்சரியம் தாங்கமுடியவில்லை.

ஏனெனில், அவரது பல்லில் சிக்கியதுசிர்கோனியா (Cubic Zirconia) என்றஒரு குட்டிவைரக்கல். முட்டையில் வைரம் கிடைத்த ஆனந்தத்தில் என்ன செய்வதென்று தெரியாமல் உடனே, பேஸ்புக்கில் தனக்கு அடித்த அதிர்ஷ்டம் பற்றி பகிர்ந்திருக்கிறார் சேலி.

இன்னும் கொஞ்சநாளில் கல்யாணம் செய்துகொள்ள இருக்கும் சேலிக்கு வைரக்கல் கிடைத்ததும் ஒரே ஜாலியாக துள்ளிக் கொண்டிருக்கிறாராம்.

மேலும் படிக்க