• Download mobile app
25 Apr 2024, ThursdayEdition - 2997
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மீண்டும் புதிய பொலிவுடன் ஸ்ரீ விநாயகா எலக்ட்ரிக்கல் அண்ட் ஹார்டுவேர்ஸ் காரமடையில் துவக்கம்

January 2, 2023 தண்டோரா குழு

மீண்டும் புதிய பொலிவுடன் ஸ்ரீ விநாயகா எலக்ட்ரிக்கல் அண்ட் ஹார்டுவேர்ஸ் காரமடையில் துவக்கப்பட்டுள்ளது.

இந்நிறுவனம் 2035ம் ஆண்டிற்குள் 250 மேற்பட்ட பணியாளர்களுடன் வளர காவேரி குரூப் கம்பெனியின் இணை நிர்வாக இயக்குனர் வினோத் சிங் ரத்தோர் வாழ்த்துகளை தெரிவித்தார்.

கோவை காரமடை, காமராஜ் சாலையில் ஸ்ரீ விநாயகா எலக்ட்ரிக்கல் அண்ட் ஹார்டுவேர்ஸ் புதிய கடை அமைந்துள்ளது. இதனை காவேரி குரூப் கம்பெனியின் இணை நிர்வாக இயக்குனர் வினோத் சிங் ரத்தோர் விருந்தினராக கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். தொடர்ந்து முதல் விற்பனையை துவக்கி வைத்தார்.

கோவை காரமடை திம்பம் பாளையம், சாரதா நகரில் ஸ்ரீ விநாயகா எலக்ட்ரிக்கல் அண்ட் ஹார்டுவேர்ஸ் 5 ஆண்டுகளாக செயல்பட்டு வந்தது. இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு ஸ்ரீ விநாயகா எலக்ட்ரிகல் அண்ட் ஹார்டுவேர்ஸ் கடை மின்கசிவு காரணமாக இரவு நேரத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.இதில் சுமார் 70 லட்சம் பொருட்கள் தெரிந்து நாசமானது.

இதனை தகவல் அறிந்த கோவை மாவட்டம் காவேரி குரூப் கம்பெனியின் இணை நிர்வாக இயக்குனர் வினோத் சிங் ரத்தோர் ஸ்ரீ விநாயகா எலக்ட்ரிக்கல் அண்ட் ஹார்ட்வேர்ஸ் உரிமையாளர்களுக்கு பக்க பலமாக நின்று புதிய வருடத்தில் மீண்டும் ஸ்ரீ விநாயகா எலக்ட்ரிகல் அண்ட் ஹார்டுவேர்ஸ் கடையை தொடங்குவதற்காக, தேவையான எலக்ட்ரிகல் சம்பந்தப்பட்ட பொருட்களை வழங்கி, அவர்களின் தொழில் தொடர்ந்து சிறப்பாக செயல்படுவதற்கு உறுதுணையாக நின்று ஊக்கம் அளித்துள்ளார். காவேரி குரூப் ஆப் கம்பெனி ஸ்ரீ விநாயகா எலக்ட்ரிக்கல் அண்ட் ஹார்டுவேர்ஸ் கடைக்கு டீலர்ஷிப் ஆக இருப்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் சிறப்பு விருந்தினர் காவேரி குரூப் கம்பெனியின் இணை நிர்வாக இயக்குனர் வினோத் சிங் ரத்தோர் பேசுகையில்,

ஸ்ரீ விநாயக எலக்ட்ரிக்கல் அண்ட் ஹார்டுவேர்ஸ் இந்த சம்பவத்திற்கு பிறகு மீண்டும் எழுவதற்கு காவேரி குரூப் கம்பெனி உறுதுணையாக நிற்கும். இவர்கள் 2035 ம் ஆண்டிற்குள் 250 மேற்பட்ட பணியாளர்களுடன் மென்மேலும் வளர வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன் என்றார்.

இது குறித்து ஸ்ரீ விநாயகா எலக்ட்ரிக்கல் அண்ட் ஹார்டுவேர்ஸ் கடை உரிமையாளர்கள் கார்த்திகேயன் மற்றும் அருண்குமார் பேசுகையில்,

எங்களது தொழிலுக்கு போட்டியாளர்கள் பலர் இருந்தும் உதவுவதற்கு யாருக்கு முன் வரவில்லை. இந்த தீ விபத்து சம்பவத்திற்கு பிறகு மீண்டும் எங்கள் நிறுவனத்திற்கு கைகொடுத்தவர் காவேரி குரூப் கம்பெனி உரிமையாளர் வினோத் அவர்கள் தான். எங்களை அவர் வியாபாரியாக மட்டும் பார்க்காமல் குடும்ப நண்பராக நினைத்து இன்று உதவி செய்துள்ளார். அவரது இந்த உதவிக்கு எங்களது நிறுவனத்தின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்றார்கள்.

மேலும் படிக்க