• Download mobile app
19 Apr 2024, FridayEdition - 2991
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மின்னனு கழிவுகளை மறுசுழற்சி முறையில் மீண்டும் பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வு

January 22, 2023 தண்டோரா குழு

எதிர்கால தலைமுறைக்கு மிகப்பெரிய சவாலாக உள்ள மின்னனு கழிவுகளை மறுசுழற்சி முறையில் மீண்டும் பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வை இளம் தலைமுறையினருக்கு ஏற்படுத்துவதை பன்னாட்டு லயன்ஸ் சங்கம் 324 சி முன்னெடுத்துள்ளதாக அதன் மாவட்ட ஆளுனர் ராம்குமார் கோவையில் தெரிவித்துள்ளார்.

பன்னாட்டு லயன்ஸ் சங்கம் 324 சி சார்பாக சமூகம் சார்ந்த பணிகளை மகிழ்வித்து மகிழ் எ
னும் நோக்கத்தில் தொடர்ந்து செய்து வருகின்றனர்.இந்நிலையில் பன்னாட்டு லயன்ஸ் சங்கம் 324 சி யின் சேவை திட்டத்தின் ஒரு பகுதியாக மின்னனு கழிவுகளை சேகரித்து மறு சுழற்சி செய்வது தொடர்பான திட்ட துவக்க விழா கோவை கோ இண்டியா அரங்கில் நடைபெற்றது.

அமைச்சரவை செயலாளர்கள் ராஜ் மோகன் மற்றும் ராமலிங்கம் ஆகியோர் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், பன்னாட்டு லயன்ஸ் சங்கம் 324 சி இரண்டாம் துணை ஆளுநர் நித்யானந்தம் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட ஆளுநர் ராம்குமார் கலந்து கொண்டு மின்னனு கழிவு சேகரிப்பு திட்டத்தை துவக்கி வைத்து பேசினார்.

அப்போது அவர், எதிர்கால தலைமுறைக்கு மின்னனு கழிவுகள் என்பது மிகப்பெரிய சவாலாக இருப்பதாகவும்,இதனை சமாளிக்கும் விதமாக மின்னனு கழுவிகளில் நல்ல முறையில் இயங்கும் டேப்லேட், லேப்டாப் போன்றவைகளை மீண்டும் மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பயன்படுத்துவது குறித்த திட்டங்களை செயல்படுத்த உள்ளதாக தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், பன்னாட்டு லயன்ஸ் சங்க 324 சி செய்தி தொடர்பு தலைவர் செந்தில் குமார், ஜி எஸ் டி ஒருங்கிணைப்பாளர் செல்வராஜ் ஜி எம் டி ஒருங்கிணைப்பாளர் சூரி நந்தகோபால் ஜி எல் டி ஒருங்கிணைப்பாளர் ராஜசேகர் ஜிஈடி ஒருங்கிணைப்பாளர் பாஸ்கர் டிஜிட்டல் மார்க்கெட்டிங் ஒருங்கிணைப்பாளர் முருகன் உட்பட மண்டல வட்டார, தலைவர்கள் உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க