• Download mobile app
27 Mar 2026, FridayEdition - 3698
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மாற்றான் தாய் மனப்பான்மையை விவசாயிகள் மத்தியில் மத்திய , மாநில அரசுகள் காட்டக்கூடாது – ஜி.கே.வாசன்

December 26, 2018 தண்டோரா குழு

விவசாயிகளின் உண்மை நிலையை புரிந்து விளை நிலங்கள் வழியாக உயர்மின் கோபுரம் அமைப்பதை கைவிட்டு புதைவழிதடம் வழியாக மின்பாதை அமைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

விளைநிலங்களில் மின்கோபுரம் அமைக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 13 மாவட்ட விவசாயிகள் 8 மையங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர். கோவை மாவட்டம் சுல்தான் பேட்டையில் 10 வது நாளாக காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகின்றது. காத்திருப்பு போராட்டம் நடைபெறும் மையத்தின் ஒரு பகுதியில் 4 வது நாளாக உண்ணாவிரத போராட்டமும் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் இன்று சுல்தான் பேட்டையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுடன் கலந்துரையாடினார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்,

தமிழகத்தில் தொடர்ந்து விவசாயிகள் பல்வேறு திட்டங்களால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். விவசாயிகளின் எண்ணங்களைக் பிரதிபலிக்காத அரசாக மத்திய ,மாநில அரசுகள் செயல்பட்டு வருகின்றன. தமிழகத்தில் மேகதாது விவகாரம் ஒரு பக்கம் போய் கொண்டு இருக்கையில், தற்போது விவசாய நிலத்தில் உயர் மின் கோபுரங்கள் அமைக்க பணி நடைபெற்று வருகிறது. இது கண்டிக்கதக்கது. காவல்துறை மற்றும் வருவாய் துறை மூலமாக இத்திட்டத்தைக் திணிக்க பார்க்கிறார்கள்.

மேலும், கேபிள் மூலமாக இத்திட்டத்தைக் மாற்றுவது அவசியம்.அவசர நடவடிக்கைகள் எடுக்க அரசு முன் வரவேண்டும்.உண்ணாவிரதம் இருக்கின்ற விவசாயிகளின் நிலையைக் அரசு உணர வேண்டும். மாற்றான் தாய் மனப்பான்மையைக் விவசாயிகள் மத்தியில் மத்திய ,மாநில அரசுகள் காட்டக்கூடாது. விவசாயிகளில் வாழ்வாதாரத்தைக் காக்க மாநில அரசுக்கு முழு பங்கு உண்டு எனவும் சுமூக முறையில் இந்த பிரச்சினையை தீர்க்க அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்

மேலும் படிக்க