• Download mobile app
03 Jun 2026, WednesdayEdition - 3766
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மாநிலத்தில் முதலிடம் – கோவை மாவட்ட எஸ்.பி. க்கு முதல்வர் விருது!

March 10, 2022 தண்டோரா குழு

சிறந்த முறையில் இ- சேவை மேலாண்மை செயல்படுத்துவதற்காக மாநிலத்தில் முதலிடம் பெற்றதற்காக கோவை மாவட்ட எஸ்.பி. க்கு முதல்வர் ஸ்டாலின் விருது வழங்கினார்.

கோவை மாவட்ட காவல்துறையின் காவல் கண்காணிப்பாளராக இருப்பவர் செல்வநாகரத்தினம்.இவர் பொறுப்பேற்றத்தில் இருந்து கணினி மூலமாக தொடர்ந்து காவல்துறை பணியை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்.

இதையடுத்து,சில நாட்களுக்கு முன்பு மாநிலத்தில் இ- சேவை மேலாண்மை மூலமாக சிறப்பாக செயல்பட்டதில் தமிழகத்தில் கோவை மாவட்ட காவல்துறை முதலிடம் பிடித்தது.
இதற்கிடையில்,நேற்றிலிருந்து 4 நாட்களுக்கு சென்னையில் ஆட்சியர்கள், உயர் போலீஸ் அதிகாரிகள் மாநாடு சென்னையில் முதலமைச்சர் தலைமையில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில்,இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கோவை மாவட்ட காவல்துறைக்கு தமிழகத்தில் முதலிடம் பிடித்ததற்காக எஸ்பி செல்வநாகரத்தினம் அவர்களுக்கு தமிழக முதலமைச்சர் விருதுக்கான கோப்பையை வழங்கி பாராட்டு தெரிவித்தார்.

மேலும் படிக்க