• Download mobile app
16 Feb 2026, MondayEdition - 3659
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் சங்கத்தினர் வெள்ள நிவாரண உதவி; அரிசி கோதுமை மாவு ஆடைகள் வழங்கினர்

December 11, 2023 தண்டோரா குழு

சென்னை மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் மிக்ஜாம் புயல் காரணமாக வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் பலர் வீட்டிலிருந்து வெளியே வர முடியாமல் அடிப்படை வசதிகள் கிடைக்காமல் தவித்து வருகின்றனர்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில்
கோவை மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் நல சங்கம் சார்பில் 5000 பிரட் பாக்கெட்டுகள், ஆயிரம் அரிசி மூட்டை (5 கிலோ எடையில்),ஆயிரம் சானிட்டரி நாப்கின் பாக்கெட்டுகள் லுங்கி போன்றவற்றை சங்கத் தலைவர் உதயகுமார் செயலாளர் கேசிபி சந்திர பிரகாஷ், மைக்கேல் , அம்மாசையப்பன் உள்ளிட்ட நிர்வாகிகள் அனுப்பி வைத்தனர். இதன் மதிப்பு 3 லட்ச ரூபாய். இரண்டாம் கட்டமாக 1000 மூட்டை கோதுமை மாவு தனி லாரியில் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் சங்கத்தினர் இரண்டு லாரிகளில் நிவாரண உதவி பொருட்கள் சென்னை அனுப்பி வைத்து அங்கே பொது மக்களுக்கு வீடு வீடாக வழங்க ஏற்பாடு செய்திருந்தனர்

மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் கூறுகையில்,

“கடந்த காலங்களில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புக்கும் ஒப்பந்ததாரர்கள் சங்கத்தின் சார்பில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது.தற்போது சென்னையில் பல இடங்களில் பரவலாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது.பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மேலும் பல லட்ச ரூபாய் மதிப்பிலான நிவாரண பொருட்கள் லாரிகளில் கூடுதலாக அனுப்பி வைக்கும் பணி நடக்கிறது.தமிழக வீட்டு வசதி வாரிய அமைச்சர் முத்துச்சாமி அறிவுறுத்தலின் பேரில் கோவையில் இருந்து சென்னைக்கு வெள்ளம் பாதித்த பகுதியில் வசிக்கும் மக்களுக்கு தேவையான உணவு மற்றும் உடை அத்தியாவசிய பொருட்கள் உடனடியாக அனுப்பி வைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றனர்.

மேலும் படிக்க