• Download mobile app
16 Sep 2025, TuesdayEdition - 3506
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மாணவர்களின் விளையாட்டுத் திறன்களை ஊக்குவித்தல்: அம்ருதவித்யாலயம், நல்லாம்பாளையம், 2024-2025 ஆண்டு விளையாட்டு விழா

January 28, 2025 தண்டோரா குழு

அம்ருதவித்யாலயம்,நல்லாம்பாளையம், தனது 2024-2025 ஆண்டு விளையாட்டு விழாவை ஜனவரி 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் வெகு விமரிசையாகக் கொண்டாடியது.இந்த நிகழ்வுக்கு நல்லாம்பாளையம்,எட்டிமடை மற்றும் கலபட்டி அம்ருதவித்யாலயங்களின் மேலாளர் ஸ்வாமினி முக்தாம்ருத ப்ராணா அவர்கள் தலைமைத் தாங்கினார்.

இந்நிகழ்வில் கோயம்புத்தூர் ரெட் ஃபீல்ட்ஸின் நிர்வாக ஆணையாளர், லெப்டினன்ட் கிலோனல் பி.கே.பிஜு அவர்கள் மற்றும் இந்திய வானியல் படையின் குழுத்தலைவர்ரிச்சார்டு மோசஸ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். லெப்டினன்ட் கிலோனல் பிஜு பி.கே மாணவர்களின் முயற்சிகளைப் பாராட்டி, நேர்மறையான விளையாட்டு மனப்பான்மையை வளர்த்துக்கொள்வதன் அவசியத்தை வலியுறுத்தியது மட்டுமல்லாமல் பெற்றோரின் உறுதியான ஆதரவுக்காக தமது உளமார நன்றிகளைத் தெரிவித்தார்.

இந்நிகழ்வின் போது உரையாற்றிய ரிச்சார்டு மோசஸ்,

“மாணவர்களாகிய நீங்கள் எல்லோரும் நட்சத்திரங்களைப் போன்று ஒளிர வேண்டும். சவால்கள் வெற்றிக்கான படிக்கற்களாகும். வாழ்வில் நாம் எதிர்கொள்ளும் தடைகள் நம்மை வலிமை அடையச் செய்கின்றன. தோல்வி அடைந்தால் மனம் தளராது முன்னேறுங்கள். கவனத்துடனும், நம்பிக்கையுடனும் நன்மைக்காக உழைத்திடுங்கள்.”
கொங்குநாடு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் உடற்கல்வி இயக்குனர், டாக்டர். பி. கே. கவிதா ஸ்ரீ மற்றும் அவினாசிலிங்கம் ஹோம் சயின்ஸ் மற்றும் பெண்களுக்கான உயர்கல்வி நிறுவனத்தின் உடற்கல்வி துணை இயக்குனர், டாக்டர். திருமதி. நந்தினி ஆகியோர் விடாமுயற்சி, ஓய்வு மற்றும் நேர மேலாண்மையின் முக்கியத்துவத்தை விளக்கி, தடைகளை வளர்ச்சிக்கான வாய்ப்புகளாகப் பயன்படுத்தி,கல்வி மற்றும் விளையாட்டுத் துறைகளில் மாணவர்கள் முன்னேறுவதற்கு ஊக்குவித்தனர்.

இரண்டு நாள் நடைபெற்ற இந்த நிகழ்வில் பரேடுகள், தடகளப் போட்டிகள், கலாச்சாரக் காட்சிகள் மற்றும் பெற்றோர்கள் மற்றும் ஊழியர்களுக்கான விளையாட்டுகள் ஆகியவை இடம்பெற்றன. வெற்றி பெற்ற மாணவர்களைப் பாராட்டி பரிசு வழங்கும் விழாவுடன் இந்நிகழ்வு நிறைவடைந்தது. விளையாட்டுத் திறன்கள் மற்றும் கல்வியினை மேம்படுத்துவதில் பள்ளியின் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில், நிகழ்வை ஒரு மகத்தான வெற்றியாக மாற்றியதற்காக மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களை பள்ளி முதல்வர் பாராட்டினார்.

மேலும் படிக்க