• Download mobile app
27 Mar 2026, FridayEdition - 3698
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மனித – யானை மோதலுக்கு காரணமான கனிமவள கடத்தல்களை தடுக்கக்கோரி கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு

December 24, 2018 தண்டோரா குழு

கோவை தடாகம் சுற்றுவட்டார பகுதிகளில் மனித யானை மோதலுக்கு காரணமான கனிம வள கடத்தல்களை தடுக்க கோரி, வனம் யானைகளின் வாழ்விடம் என்ற போஸ்டர்களுடன் வந்து சமூக நீதிக்கட்சியினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்

கோவை மாவட்டம் தடாகம் சுற்றுவட்டார பகுதிகளில் விளைநிலங்களை சேதப்படுத்துவதாக விநாயகன், சின்னத்தம்பி என அழைக்கப்படும் இரண்டு காட்டு யானைகளை இடமாற்றம் செய்ய வேண்டுமென விவசாயிகள் வலியுறுத்தினர். விநாயகன் என்ற யானை மயக்க ஊசி செலுத்தி பிடித்து, முதுமலை வனப்பகுதியில் வனத்துறையினர் விட்டுள்ளனர். மேலும் சின்னத்தம்பி யானையை பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், யானை – மனித மோதலுக்கு காரணமான சட்ட விரோதமாக கனிம வளக் கடத்தல்களை தடுக்க கோரியும், சமூக நீதிக்கட்சியினர் வனம் யானைகளின் வாழ்விடம் என்ற போஸ்டர்களுடன் வந்து கோவை மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு அளித்தனர். மேலும், கனிம வளக்கடத்தல்களால் யானைகளின் வாழ்விடமும், வலசை பாதையும் பாதிக்கப்படுவதாக கூறிய அக்கட்சியினர், அதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தினர்.

மேலும் படிக்க