• Download mobile app
11 Jun 2026, ThursdayEdition - 3774
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மனம் இருந்தால் மார்க்கம் உண்டு என்பதை நிரூபித்த மாற்றுத்திறனாளி ஷாஜி தாமஸ்.

April 16, 2016 தண்டோரா குழு

கேரளா மாநிலத்தில் உள்ள இடுக்கி மாவட்டத்தில் வசிக்கும் 45 வயது மாற்றுத்திறனாளியை மக்கள் முட்டாள் என்று அழைத்தனர். அதற்குக் காரணம் அவர் உபயோகப்படுத்திய பாகங்கள் மற்றும் மறுசுழற்சி செய்த பொருள்களைக் கொண்டு ஒரு இரட்டை இருக்கை அல்ட்ராலைட் விமானத்தை வடிவமைத்து வந்தது தான்.

ஷாஜி தாமஸ் ஊமை மற்றும் செவி திறனை இழந்தவர். இவர் எடுத்துக்கொண்ட முயற்சி அவரை உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற செய்தது.

ஷாஜியின் விமான ஆசை அவருடைய 15 வயதில் உருவாகியது. ரப்பர் தோட்டத்தில் பூச்சிக்கொல்லி மருந்துகளைத் தெளிக்க சிறிய விமானத்தை உபயோகப்படுத்துவதைப் பார்த்த அவர் மிகவும் ஈர்க்கப்பட்டார்.

இதனால் ஒரு நாள் தாமஸ் வீட்டை விட்டு வெளியேறி பைலட் ஒருவரைச் சந்தித்து அவரிடம் இருந்து விமான போக்குவரத்து கையேடுகளை வாங்கிக் கொண்டு அந்த இடத்திலேயே கூலி வேலைகளைச் செய்தார்.

தாமஸ் தன் கனவை நினைவாக்க தன்னுடைய நிலத்தை விற்று விட்டார். முதலில் விமானத்தின் வெளிப்பகுதியை மட்டும் தயாரித்து விட்டு ஒரு மோட்டார் வாகனத்தையும் அத்துடன் சேர்த்தார்.

இரண்டாவது முறையாகத் தயாரித்த விமான மாதிரியை ஒரு பொறியியல் கல்லூரியில் விற்று அங்குக் கிடைத்த பணத்தில் விமானத்தின் விசைப்பொறி வாங்கி தன்னுடைய வேலையை முடித்தார்.

பின்னர் திருவனந்தபுரத்தில் ஓய்வு பெற்ற சக்ஜ் நீர் என்பவருடைய தனியார் விமான தலத்தில் ஷாஜியின் Saji X Air-S விமானம் பல முறை வெற்றிகரமாகச் சோதனை செய்யப் படுத்தப்பட்டது.

இவர் தான் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்று உள்ள முதல் மாற்றுத்திறனாளி ஆவார். தற்போது இரண்டு விசைப்பொறியைப் பயன்படுத்தி ஒரு விமானத்தைச் செய்ய சிவில் விமான போக்குவரத்து டைரக்டர் ஜெனரல் அவர்களிடம் இருந்து கிடைக்க வேண்டிய உரிமத்திற்காக காத்துக்கொண்டு இருக்கிறார்.

மேலும் தன்னுடைய வருமானத்திற்காக, இசைக்குழு, புகைப்படக்காரர் போன்ற தொழிலைச் செய்த தாமஸ் தற்போது வானியல் மெக்கானிக் வேலையைச் செய்துவருகிறார்.

மேலும் படிக்க