August 23, 2017
தண்டோரா குழு
மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ்பிரபு தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்ற தொடர் ரயில் விபத்துக்களுக்குப் பொறுப்பேற்று ரயில்வே அமைச்சர் சுரேஷ்பிரபு தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
இது குறித்து டுவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில்,
கடந்த மூன்று ஆண்டுகளாக ரயில்வேயின் நலனுக்காக கடுமையாக உழைத்துள்ளேன். பிரதமர் தலைமையில் நான் ரயில்வேயின் அனைத்து துறைகளிலும் மாற்றங்கள் கொண்டு வந்தேன். நவீன தொழில்நுட்பத்துடன் ரயில்வே முன்னேற்றப் பாதை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது.
மேலும் பிரதமர் மோடியை சந்தித்து எனது ராஜினாமா கடிதத்தை அளிக்க உள்ளேன்.
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.