• Download mobile app
22 Jun 2026, MondayEdition - 3785
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மத்திய பிரதேசத்தின் முதல்வராக கமல்நாத் தேர்வு 17ம் தேதி பதவியேற்பு!

December 14, 2018 தண்டோரா குழு

இரண்டு நாள் சலசலப்புகளுக்கு பின்னர் மத்திய பிரதேசத்தின் முதல்வராக மூத்த காங்கிரஸ் தலைவர் கமல்நாத் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்தியபிரதேசத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் மொத்தமுள்ள 230 தொகுதிகளில் 114 இடங்களை வென்ற காங்கிரஸ் கட்சி பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைக்கிறது. நடந்து முடிந்த 5 மாநில சட்டமன்ற தேர்தலில் ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஷ்கர் ஆகிய 3 மாநிலங்களில் காங்கிரஸ் வெற்றிபெற்றுள்ளது. இதனையடுத்து 3 மாநிலங்களில் முதல்வர்களை தேர்வு செய்வதற்கான நடவடிக்கை துவங்கியது. மூன்று மாநில முதல்வர்களையும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தேர்ந்தெடுப்பார் என கட்சி தரப்பினர் தெரிவித்து வந்தனர். இதற்காக போபாலில் நடைபெற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் மத்திய பிரதேசத்தின்

முதலமைச்சராக கமல்நாத் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

ஆளுநர் ஆனந்தி பென் பட்டேலை கமல்நாத் இன்று சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோருகிறார். அதன் தொடர்ச்சியாக போபாலில் உள்ள லால்பரேட் மைதானத்தில் திங்கட்கிழமை பதவியேற்பு விழா நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க