• Download mobile app
17 Mar 2026, TuesdayEdition - 3688
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மது போதையில் கார் ஒட்டிய பெண் மருத்துவர்

July 26, 2017 தண்டோரா குழு

கேரளா கொல்லம் பகுதியில் மது போதையில் கார் ஒட்டிய பெண் மருத்துவர் சாலையோரம் உள்ள கார்கள் மீது மோதியதில் 3 பேர் காயம் அடைந்தனர், 6 கார்கள் சேதம் அடைந்தன.

கேரளா அருகே உள்ள கொல்லம் நகரில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில், பல் மருத்துவராக பணியாற்றி வருபவர் ரேஷ்மா.இவர் திங்கள் இரவு மது போதையில் கார் ஒன்றை ஓட்டி சென்றுள்ளார்.

இதில் தாறுமாறாக ஓடிய கார் கட்டுப்பாட்டை இழந்து முன்னாள் சென்ற கார்கள் மீது மோதியது. இதில் மூன்று பேர் காயம் அடைந்தனர் ஆறு கார்கள் சேதம் அடைந்தன.கொல்லம் பகுதி போலீஸார் ரேஷ்மாவையும் அவரது நண்பர்களையும் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் காரில் இருந்த மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

மேலும் படிக்க