• Download mobile app
15 Feb 2026, SundayEdition - 3658
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மதுரை வாடிக்கையாளர் நெட்வொர்க்கிங் கூட்டத்தில் இஜி & இகியூ தொடருடன் ஒருங்கிணைந்த எல்ஜி டிமாண்ட் = மேட்ச் தொழில்நுட்பத்தை எல்ஜி அறிமுகப்படுத்தி விளக்கக் காட்சியளித்தது

February 15, 2026 தண்டோரா குழு

உலகின் முன்னணி ஏர் கம்பிரஸர் உற்பத்தியாளர்களில் ஒன்றான எல்ஜி எக்யூப்மென்ட்ஸ் நிறுவனம் மதுரையில் நடைபெற்ற வாடிக்கையாளர் நெட்வொர்க்கிங் கூட்டத்தில், மாறிக்கொண்டிருக்கும் காற்றுத் தேவைகளின் சூழலில் நிலையான வேகக் கம்பிரஸர்கள் இயங்கும் விதத்தை மேம்படுத்தும் Demand=Match தொழில்நுட்பத்தை காட்சிப்படுத்தியது.

எல்ஜி EG மற்றும் EQ தொடர் ஏர் கம்பிரஸர்களுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ள இந்த அமைப்பு,கம்பிரஸர் உள்புற காற்றோட்டத்தை நுண்ணறிவுடன் மீளச் சுழற்றி தொழிற்சாலையின் உடனடி தேவைக்கேற்ப காற்று விநியோகத்தை தானாகச் சீரமைக்கிறது. இதன் மூலம், நிலையான வேகக் கம்பிரஸர்களின் எளிமை மற்றும் வலிமையுடன், VFD-க்கு இணையான ஆற்றல் சேமிப்பு கிடைக்கிறது.

பெரும்பாலான தொழிற்சாலைகள் fixed-speed கம்பிரஸர்களை பயன்படுத்துகின்றன. தேவைகள் குறையும்போதும் அவை ஒரே மாதிரியான உற்பத்தியையே தொடர்ந்து வழங்குகின்றன. எல்ஜி Demand=Match அமைப்பு இவ்வகை இயந்திரங்களுக்கு நுண்ணறிவை அளிக்கிறது—உடனடி தேவைக்கேற்ப விநியோகத்தை தானாகச் சீரமைத்து, வாடிக்கையாளர்கள் மின்சாரச் செலவைக் குறைக்கவும், இயந்திரப் பகுதிகளில் ஏற்படும் தேய்மானத்தை குறைக்கவும், uptime-ஐ மேம்படுத்தவும் உதவுகிறது.என்று எல்ஜி எக்யூப்மென்ட்ஸ் லிமிடெட் இந்தியாவின் சேனல் சேல்ஸ் தலைவர் காசி பி.எல், தெரிவித்தார்

சிக்கல்: நிலையான உற்பத்தி Vs மாறும் தேவை

பெரும்பாலான தொழிற்சாலைகளில், கம்பிரஸ் செய்யப்பட்ட காற்றுத் தேவைகள் நிமிடம் தோறும், பணி முறை தோறும் மாறிக்கொண்டே இருக்கின்றன. ஆனால் நிலையான வேகக் கம்பிரஸர்கள், கட் -இன் மற்றும் கட் -அவுட் அழுத்த எல்லைகளுக்கு இடையில் சுழற்சி செய்வதன் மூலம் மட்டுமே பதிலளிக்கின்றன. இதன் விளைவாக:

• அதிகப்படியான மின்சார இழப்பு
• தேவையற்ற அழுத்த அதிகரிப்பு (pressure overshoot)
• அடிக்கடி சுழற்சிகள் காரணமாக கூறுகளில் அதிக மெக்கானிக்கல் அழுத்தம்
இதனால் இயக்கச் செலவுகள் உயர்ந்து, இயந்திர ஆயுள் குறையக்கூடும்.

தீர்வு: எல்ஜி டிமாண்ட் = மேட்ச் தொழில்நுட்பம்

Demand=Match தொழில்நுட்பம், தொழிற்சாலையின் உடனடி தேவைக்கேற்ப காற்று விநியோகத்தை தானாகச் சீரமைக்கிறது. கம்பிரஸர் உள்புற காற்றோட்டத்தை மீளச் சுழற்றி, விநியோகம் எப்போதும் தேவைக்குச் சமமாக இருப்பதை உறுதிப்படுத்துகிறது. இதனால் தேவையற்ற சுழற்சிகள் குறைந்து, அழுத்தம் நிலையாக பராமரிக்கப்பட்டு, செயல்பாட்டு சூழ்நிலைகள் தொடர்ந்து மாறினாலும் கூட ஆற்றல் திறன் மேம்படுகிறது.

வாடிக்கையாளர்களுக்கான முக்கிய நன்மைகள்

• மின்சாரச் சேமிப்பு: அதிகபட்சம் 17% வரை ஆற்றல் குறைவு
• நம்பகத்தன்மை: குறைந்த cut-in / cut-out சுழற்சிகள் மூலம் மெக்கானிக்கல் அழுத்தமும் இயந்திரப் பகுதிகளில் ஏற்படும் தேய்மானம் குறைகிறது
• செலவு திறன்: பெரிய முதலீடு இன்றியே (capital-light) திறன் உயர்வு; இயந்திரத்தை “lifetime young” ஆக வைத்திருக்க உதவும்
• திறைத்தன்மை: குறைந்த மின்சாரப் பயன்பாடு நேரடியாகக் குறைந்த CO₂ உமிழ்வாக மாறும்
• உத்தரவாதம்: EG & EQ தொடர்களில் கிடைக்கும்—EG தொடருக்கு அதிகபட்சம் 10 ஆண்டு airend உத்தரவாதம், EQ தொடருக்கு 5 ஆண்டு airend உத்தரவாதம்

Demand=Match அமைப்பு, வாடிக்கையாளர்களின் மொத்த சொத்து உடமைச் செலவை (Total Cost of Ownership) குறைக்கும் வகையில் வேறுபட்ட, மதிப்பு சார்ந்த தீர்வுகளை வழங்கும் ELGi-யின் நீண்டகால வணிகத் திட்டத்துக்கு ஆதரவளிக்கிறது. திறன்தன்மையை எளிமையாகவும் மலிவாகவும் ஆக்குவதன் மூலம், பொதுப் பொறியியல், உணவு செயலாக்கம், அரிசி & பருப்பு சீரமைப்பு, நூற்பாலை உள்ளிட்ட துறைகளுடன், வாகன உற்பத்தி மற்றும் மின்னணுவியல் போன்ற துறைகளிலும் விரைவான தழுவலை ELGi ஊக்குவிக்கிறது.

கிடைக்கும் நிலை: ELGi Demand=Match தற்போது EG மற்றும் EQ தொடர் கம்பிரஸர்களில் தொழிற்சாலையிலேயே முன்பாக பொருத்தப்பட்ட (factory-fit) வகையில் கிடைக்கிறது. மேலும் தகவல்களுக்கு, உங்கள் அருகிலுள்ள ELGi பிரதிநிதியை தொடர்பு கொள்ளவும்.

மேலும் படிக்க