• Download mobile app
26 Mar 2026, ThursdayEdition - 3697
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மக்கள் நடமாட்டம் இல்லாததால் கண்ணாடி போல் காட்சியளிக்கும் கோவை குற்றால அருவி !

June 29, 2020 தண்டோரா குழு

கொரோனா பொது முடக்கத்தால் மூடப்பட்ட கோவை குற்றலத்தில், மக்கள் நடமாட்டம் இல்லாததால் அருவி நீர் கண்ணாடி போல் காட்சியளிக்கிறது.

மேற்கு தொடர்ச்சி மலைகளில் உருவாகி நொய்யலில் கலக்கும் கோவை குற்றாலம் அருவி கோவையின் முக்கிய சுற்றுதலத்தில் ஒன்று. தமிழகம் மட்டுமல்லாமல் நாடு முழுவதுமிருந்து ஏராளமான பொதுமக்கள் வந்து செல்வது வழக்கம். பொதுவாக பள்ளி, கல்லூரி கோடை விடுமுறை நாட்களில் கோவை குற்றலாம் மக்கள் நடமாட்டம் மிகுந்து காணப்படும். ஆனால் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் 22 ஆம் தேதி கோவை குற்றலாம் மூடப்பட்டது. தொடர்ந்து கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது. இதனால் கோவை குற்றாலம் அருவிக்கு செல்லும் தடை நீடித்து வருகிறது.

கோடை விடுமுறைகளில் மூடி இருந்த குற்றாலம் அருவி, மழைக்காலம் தொடங்கி உள்ள போது மூடப்பட்டுள்ளது. நீர் வரத்து அதிகரித்துள்ளதால் கோவை குற்றாலம் அருவி நீர் கண்ணாடி போல் காட்சியளிக்கிறது.மேலும் மக்கள் நடமாட்டம் இல்லாததால் வன விலங்குகள் அதிகளவு தண்ணீர் குடிக்க வரத்துவங்கி உள்ளது. மேலும் சட்ட விரோதமாக மக்கள் நடமாட்டம் உள்ளதா என கண்காணிக்க தினமும் வனத்துறை ஊழியர்கள் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் படிக்க