• Download mobile app
26 Mar 2026, ThursdayEdition - 3697
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மக்களவைத் தேர்தலில் தோற்றவர்கள் எல்லாம் தோல்வி அடைந்தவர்கள் அல்ல – மம்தா பானர்ஜி

May 23, 2019 தண்டோரா குழு

தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்தவர்கள் எல்லாம் தோற்றவர்கள் அல்ல என்று மம்தா பானர்ஜி கருத்து தெரிவித்துள்ளார்.

மக்களவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது. இதில், நாடு முழுவதும் பாஜக தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. பாஜக கூட்டணி 342 இடங்களிலும், காங்கிரஸ் கூட்டணி 92 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது. அந்த வகையில் உத்திரப்பிரதேசம், மேற்குவங்கம் போன்ற மாநிலங்களில் பாஜக வெற்றி முனைப்பில் உள்ளது. மேற்குவங்கத்தில் உள்ள 42 தொகுதிகளில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி 23 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. அங்கு பாஜக 17 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.

இந்நிலையில் டிவிட்டரில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள், ஆனால் வெற்றி வாய்ப்பை இழந்தவர்கள் எல்லாம் தோற்றுப் போனாவர்கள் அல்ல. நாங்கள் முழுமையாக ஆய்வு செய்த எங்களின் கருத்துகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம். விவிபேட் இயந்திரத்துடன் பொருந்தக்கூடிய வாக்கு எண்ணிக்கை முழுவதுமாக முடியட்டும்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க