• Download mobile app
07 Sep 2026, MondayEdition - 3862
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மகளிர் மேம்பாட்டிற்காக இலவச தையல் இயந்திரம் வழங்கும் நிகழ்ச்சி.! – துணை மேயர் பங்கேற்பு

March 17, 2022 தண்டோரா குழு

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கோவை கிளை சார்பில் ஆதரவற்ற, ஏழைப் பெண்களுக்கு ‘இலவச தையல் இயந்திரம் வழங்கும் நிகழ்ச்சி’ இன்று (வியாழன்) மாலை 5 மணிக்கு கரும்புக்கடை ஹிதாயா மகளிர் இஸ்லாமியக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

ஜமாஅத்தின் கோவை மாவட்டத் தலைவர். P.S. உமர் ஃபாரூக் துவக்கவுரை நிகழ்த்தினார்.
இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கோவை மாநகராட்சியின் துணை மேயர் வெற்றிச் செல்வன் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கியதுடன் பயனாளிகளுக்கு தையல் இயந்திரங்களையும் வழங்கினார்.

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் மாநிலத் தலைவர் மௌலவி முஹம்மது ஹனீஃபா மற்றும் ஹிதாயா மகளிர் இஸ்லாமியக் கல்லூரியின் தாளாளர் மௌலவி முஹம்மது இஸ்மாயில் இம்தாதி ஆகியோர் சிறப்புரை நிகழ்த்தினர்.

இந்நிகழ்வில் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் மாநிலப் பொதுச்செயலாளர் K. ஜலாலுதீன், மக்கள் சேவைத்துறை செயலாளர் I. ஜலாலுதீன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

மகளிர் மேம்பாடு மற்றும் சுயமுன்னேற்றத்திற்கான இதுபோன்ற மக்கள் சேவைப் பணிகளை அனைத்து தரப்பினருடனும் இணைந்து சிறப்பான தாக்கம் ஏற்படுத்திடும் வகையில் பணியாற்ற ஒவ்வொருவரும் முயற்சிக்க வேண்டும் என இந்நிகழ்வு வலியுறுத்தியது.

மேலும் படிக்க