• Download mobile app
07 Sep 2025, SundayEdition - 3497
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மகளின் இறுதி சடங்கில் கலந்துக்கொள்ள விசா வழங்க அமெரிக்க அதிபருக்கு தந்தை கோரிக்கை

July 22, 2017 தண்டோரா குழு

அமெரிக்காவில் கொலை செய்யப்பட்ட மகளின் இறுதி சடங்கில் கலந்துக்கொள்ள விசா வழங்கவேண்டும் என்று அந்த பெண்ணின் தந்தை அமெரிக்க அதிபருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

அமெரிக்க நாட்டின் நியூஜெர்சி நகரில் வசித்து வந்த 11 வயது சிறுமி அபிகெயில், அவளது அண்டை வீட்டுக்காரர் அண்ட்ரிஸ் எரசோ என்னும் 18 வயது இளைஞரால் குத்தி கொலை செய்யப்பட்டாள்.

கடந்த 2௦௦1-ம் ஆண்டு, அபிகெயிலின் தந்தை போதை பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டு, அமெரிக்க நாட்டிலிருந்து வெளியேற்றபட்டார். தற்போது தனது மூத்த மகளுடன் ஜாமைக்கா நாட்டில் வசித்து வருகிறார்.

அபிகெய்லின் இறுதி சடங்கில் பங்கேற்பதற்காக அமெரிக்க நாட்டிற்கு வர விசாவிற்கு விண்ணப்பித்து இருந்தார். ஆனால், விசா கிடைக்கவில்லை. இதையடுத்து, மகளில் இறுதி சடங்கில் பங்கேற்க, அமெரிக்க வர அனுமதி தரவேண்டும் என்று அமெரிக்க அதிபர் டோனாட் டிரம்புக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் படிக்க