• Download mobile app
03 Jun 2026, WednesdayEdition - 3766
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

போலீஸ்காரரை கிரிக்கெட் மட்டையால் தாக்கிய காவலர் இருவர் மீது வழக்குப்பதிவு

January 29, 2022 தண்டோரா குழு

கோவையில் மனைவியுடன் தகாத உறவு வைத்திருந்த போலீஸ்காரரை கிரிக்கெட் மட்டையால் தாக்கிய காவலர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடந்து வருகிறது.

கரூர் மாவட்டத்தை சேர்ந்தவர் முருகானந்தம் (37). இவர் கோவைப்புதூர் 4வது பட்டாலியனில் போலீஸ்காரராக உள்ளார். இவருக்கு திருமணமாகி கவுசல்யா (34) என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இவர்கள் கோவைப்புதூர் போலீஸ் குடியிருப்பில் குடும்பத்துடன் தங்கியுள்ளனர். அப்போது, எதிர்வீட்டில் வசிக்கும் போலீஸ்காரர் ராமச்சந்திரன் (32) மனைவியுடன், கவுசல்யா நட்பாக பழகி வந்துள்ளார். அப்போது ராமச்சந்திரனுக்கும், கவுசல்யாவுக்கும் இடையே தகாத உறவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனையறிந்த முருகானந்தம், ராமச்சந்திரனை கண்டித்துள்ளார். இது தொடர்பாக அவர்களுக்கிடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில், நேற்று மீண்டும் அவர்களிடையே தகராறு ஏற்பட்டது. இதில், ஆத்திரமடைந்த முருகானந்தம், கிரிக்கெட் பேட்டால் ராமச்சந்திரனை சரமாரியாக தாக்கியுள்ளார்.

இதில், அவருக்கு உடலில் பலத்த காயம் ஏற்பட்டது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அங்கிருந்தவர்கள் காயமடைந்த ராமச்சந்திரனை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து ராமச்சந்திரன் குனியமுத்தூர் போலீசில் அளித்த புகாரின்பேரில், போலீசார் முருகானந்தம் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதேபோல், முருகானந்தம் மனைவி கவுசல்யா குனியமுத்தூர் போலீசில் புகார் அளித்துள்ளார். அதில், எதிர்வீட்டில் வசிக்கும் ராமச்சந்திரன் மனைவி திவ்யாவும், நானும் தோழிகளாக பழகி வந்தோம். இதற்கிடையே கடந்த ஆண்டு நவம்பர் மாதம் திவ்யா 2வது பிரசவத்திற்காக அவரது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். அப்போது எனது வீட்டுக்கு வந்த ராமச்சந்திரன் என்னிடம் தகாத முறையில் நடந்து கொண்டார்.

அதன்பின்னரும் மிரட்டி டார்ச்சர் செய்து வருகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென தெரிவித்திருந்தார். அந்த புகாரின் பேரில், பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் ராமச்சந்திரன் மீது வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் படிக்க