• Download mobile app
25 Oct 2026, SundayEdition - 3910
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் ஒரே மேடையில் 36 பேர் எழுதிய புத்தகங்கள் வெளியீடு!- லிங்கன் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்து கவனம் ஈர்ப்பு

October 24, 2026 தண்டோரா குழு

கோவையில் நடைபெற்ற ‘பெரிதினும் பெரிது கேள் – 2026’ தொழில்முனைவோர் மாநாட்டில், முதல் முறையாகப் புத்தகம் எழுதிய 36 பேர் தாங்கள் எழுதிய புத்தகங்களை ஒரே மேடையில் வெளியிட்ட நிகழ்வு, லிங்கன் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்தது.

27 வயது இளைஞர்கள் முதல் 56 வயதுடையவர்கள் வரை பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள் எழுதிய இந்தப் புத்தகங்களில், தங்களது அனுபவங்களும் பல்வேறு துறை சார்ந்த கருத்துகளும் இடம்பெற்றுள்ளன.

ஞான சஞ்சீவனம் குருகுலம் மற்றும் மிஷன் மில்லியனர் கிளப் சார்பில், இரண்டாவது ஆண்டாக ‘பெரிதினும் பெரிது கேள் – 2026’ மாநாடு கோவை லீ மெரிடியன் ஓட்டல் அரங்கில் இன்று நடைபெற்றது. இதில் சுமார் 1,200 தொழில்முனைவோர்கள் பங்கேற்றனர்.

இது தொடர்பாக ஞான சஞ்சீவனம் குருகுலம் மற்றும் மிஷன் மில்லியனர் கிளப் நிறுவன தலைவர் சசி குமார் கூறுகையில்,

வேலை தேடுபவர்களாக மட்டுமின்றி, மற்றவர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் தொழில்முனைவோராக இளைஞர்கள் உருவாக வேண்டும் என்ற நோக்கில் இம்மாநாடு நடத்தப்பட்டு வருவதாக தெரிவித்தார்.தொழில்துறையில் வெற்றி பெற்றவர்கள் தங்களது அனுபவங்கள், எதிர்கொண்ட சவால்கள், வளர்ச்சிக்கான வழிமுறைகள் குறித்து மாநாட்டில் பகிர்ந்து கொள்ள உள்ளதாக அவர் தெரிவித்தார்.

மாநாட்டின் முக்கிய நிகழ்வாக, இதுவரை புத்தகம் எழுதாத 36 முதன் முறை எழுத்தாளர்கள் தாங்கள் எழுதிய 36 புத்தகங்களை ஒரே மேடையில் வெளியிட்டனர். இதில் 27 வயது முதல் 56 வயது வரையிலான பல்வேறு வயதினரும், வெவ்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களும் தங்களது சிந்தனைகளையும் அனுபவங்களையும் புத்தகங்களாகப் பதிவு செய்திருந்தனர்.

ஒரே நேரத்தில் 36 எழுத்தாளர்களின் புத்தகங்கள் வெளியிடப்பட்ட இந்த நிகழ்வு லிங்கன் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றது இம்மாநாட்டின் சிறப்பம்சமாக அமைந்தது.விழாவில் ஸ்கை குழும நிறுவனர் ஸ்கை வி.சுந்தர்ராஜ், கோவை ரூட்ஸ் குழும மனிதவள மேம்பாட்டுத்துறை இயக்குநர் டாக்டர் கவிதாசன்,தைரோகேர் நிறுவனர் டாக்டர் வேலுமணி, சாணக்கியா தொலைக்காட்சி நிறுவனர் ரங்கராஜ் பாண்டே, முன்னாள் காவல் கண்காணிப்பாளர் டாக்டர் ஏ. கலியமூர்த்தி, ஆரோக்கியா ஹெல்த் கேர் நிர்வாக இயக்குநர் டாக்டர் ஜி.சிவராமன் உள்ளிட்ட தொழில்துறையினர் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த சாதனையாளர்கள் பங்கேற்றனர்.

மிஷன் மில்லியனர் கிளப் சார்பில் தொழில் வளர்ச்சியுடன் தனிநபர் முன்னேற்றம் மற்றும் சமூகப் பொறுப்புணர்வை வளர்க்கும் வகையில் பல்வேறு பயிற்சிகளும் வழங்கப்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டு நடைபெற்ற முதல் மாநாட்டில் பங்கேற்றவர்களில் 31 பேர், இந்த ஆண்டு மாநாட்டின் ஒருங்கிணைப்பாளர்களாகப் பொறுப்பேற்றுச் செயல்பட்டனர்.

தொழில்முனைவோர் தங்களது அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வதுடன், புதிய தலைமுறையினரின் சிந்தனைகளையும் எழுத்தாற்றலையும் ஊக்குவித்து, வேலைவாய்ப்புகளை உருவாக்கும் சமூகத்தை உருவாக்கும் நோக்கில் இம்மாநாடு தொடர்ந்து நடத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

மேலும் படிக்க