• Download mobile app
20 Jun 2026, SaturdayEdition - 3783
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

போலி செய்தியை அடையாளம் காண வாட்ஸ் ஆப்பின் புதிய அப்டேட்

June 9, 2018 தண்டோரா குழு

இந்தியாவில் தகவல் பரிமாற்றத்தில் வாட்ஸ் ஆப் முதலிடத்தில் உள்ளது. மாதத்திற்கு சுமார் 20 கோடி பேர் இந்த செயலியை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் இதே வாட்ஸ் செயலியில் தான் நாள்தோறும் ஏதேனும் ஒரு போலி செய்தி அல்லது விளம்பரங்கள் பரப்பி வருகின்றன.

இந்த பிரச்னையை சமாளிக்க வாட்ஸ் ஆப் புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது. இந்தப் புதிய வசதியால், மற்றொரு நபரின் தகவல்களை நாம் பகிரும்போது அதில் ‘Forwarded’ எனும் அடையாளம் குறிப்பிடப்படும். இது தகவலை அனுப்புவோருக்கும், பெறுவோருக்கும் தெரியும் வகையில் இடம்பெறும். இதற்கு வாட்ஸ் அப் 2.18.179 என்ற வெர்சனை அப்டேட் செய்ய வேண்டும்
இந்த அப்டேட் மூலம் குறிப்பிட்ட ஒரு தகவல் பலரால் பகிரப்படுகிறது என்பதை அடையாளம் காண உதவியாக இருக்கும். இதுமட்டுமின்றி இதன் மூலம் வாட்ஸ் ஆப் பயனீட்டாளர்கள் செய்திகளை உண்மை தன்மை அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.

‘குட் மார்னிங்’ போன்ற தகவல்களை அதிகம் பகிர்வதால் எந்த பிரச்னையும் ஏற்பட போவதில்லை. ஆனால், வெறுப்புணர்வை தூண்டும் வகையில் போலியான தகவல்கள் பெரும்பாலான மக்களை சென்றடைவதை இது கட்டுப்படுத்தும் என்று வாட்ஸ் ஆப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க