• Download mobile app
22 May 2025, ThursdayEdition - 3389
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

போருக்கு செல்ல அனுமதி அளிக்க வேண்டும் – மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த பள்ளி ஆசிரியர் !

August 10, 2020 தண்டோரா குழு

கோவை வடவள்ளி பகுதியைச் சேர்ந்தவர் அரசு. இவர் கோவை காளம்பாளையம் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் அறிவியல் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இன்று கோவை மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு ஒன்றை அளித்தார்.

அதில் எல்லையில் போரில் கலந்து கொள்ள தன்னை அனுமதிக்க வேண்டும் என கேட்டு ஆட்சியரிடம் மனு அளித்ததாக தெரிவித்தார்.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

இந்தியா சீனா இடையே போர் ஏற்பட்டால் அதில் தான் கலந்து கொண்டு உயிர் தியாகம் செய்ய தயாராக இருப்பதாகவும் தன்னை இராணுவத்தினருடன் இணைந்து பணியாற்ற அனுமதிக்க வேண்டும் என்றார். இந்தியா சீனாவிற்கு இடையே போர் ஏற்பட்டால் இந்தியாவின் தென்கோடியில் உள்ள தமிழகத்தின் கோவை மாவட்டத்திலிருந்து முதல் ஆளாக லடாக் பகுதிக்கு சென்று நமது இந்திய ராணுவ வீரர்களுடன் சேர்ந்து போர் புரிய தான் விரும்புவதாக கூறிய அவர் பள்ளிப்பருவம் முதல் கல்லூரி வரை தேசிய மாணவர் படையில் சேர்ந்து பயிற்சி பெற்று உள்ளதாக தெரிவித்தார்.

மேலும் படிக்க