• Download mobile app
08 Sep 2025, MondayEdition - 3498
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

போரால் பாதிக்கப்பட்ட விலங்குகளை காப்பாற்றிய மக்கள்

July 29, 2017 தண்டோரா குழு

சிரியாவில் உள்நாட்டு போரால் விலங்கியல் பூங்காவில் தண்ணீர் மற்றும் உணவு இல்லாமல் சிக்கியிருந்த 9 விலங்குகள் உள்ளூர் மக்கள் மற்றும் சர்வதேச தன்னார்வ தொண்டு நிறுவனத்தால் காப்பற்றப்பட்டுள்ளன.

சிரியா நாட்டின் அலேப்பபோ நகரில் ‘ஆலிம் அழ சாகார்’ என்னும் விலங்கியல் பூங்கா உள்ளது.இந்த பூங்காவின் உரிமையாளார் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவிற்கு சென்றுவிட்டார்.

சிரியாவின் உள்நாட்டு போரால், விலங்குகளை கவனித்துக்கொண்டிருந்தவர்களும் விலங்குகளை தனியே விட்டுவிட்டு ஓடிவிட்டனர்.போரின்போது, அந்த விலங்கு காட்சி சாலை அருகே வெடித்த குண்டுகளால், அந்த இடம் சேதமடைந்துள்ளது. விலங்குகளாய் கவனித்துக்கொள்ள யாரும் முன்வரவில்லை. இதனால், அங்கிருந்த விலங்குகளுக்கு சரியான தண்ணீரோ அல்லது நல்ல உணவோ இல்லாமல் தவித்து வந்துள்ளது.

விலங்குகள் படும் வேதனையை அறிந்த அங்கிருந்த மக்கள் தங்களால் ஆன உணவுகளை அங்கிருத்த விலங்குகளுக்கு வழங்கி வந்துள்ளனர்.

இந்த விலங்குகளின் நிலைமையை அறிந்த சர்வதேச தன்னார்வ தொண்டு நிறுவனம், உள்ளூர் மக்கள் உதவியுடன் 3 சிங்கம், 2 புலி, 2 ஆசிய கரடிகள் மற்றும் நான்கு கழுதை புலிகளை மீட்டுள்ளனர். இந்த மீட்கப்பட்ட விலங்குகள் துருக்கி நாட்டின் காராசெபே என்னும் கால்நடை பராமரிப்பு கீழ் உள்ளன.

அந்த பூங்காவில் சிக்கியிருக்கும் மற்ற விலங்குகளை விரைவில் மீட்டு, ஜோர்டான், தென் ஆப்பிரிக்கா மற்றும் நெதர்லாந்து ஆகிய இடங்களில் உள்ள வன இடங்களில் விடப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க