• Download mobile app
19 Apr 2024, FridayEdition - 2991
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

போத்தனூர் – பாலக்காடு இடையே பராமரிப்புப் பணி கோவை ரயில்கள் இன்று ரத்து

December 21, 2022 தண்டோரா குழு

போத்தனூர் – பாலக்காடு இடையே ரயில் பாதையில் பொறியியல் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், டிசம்பர் 21 ஆம் தேதி (இன்று) கோவை வழித்தடத்தில் இயக்கப்படும் ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது.

இதுகுறித்து சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் கூறியிருப்பதாவது:

ஈரோடு – பாலக்காடு டவுன் மெமு ரயில், பாலக்காடு டவுன் , ஈரோடு மெமு ரயில், கோவை – ஷொரனூர் ரயில், கோவை ரயில், டிசம்பர் 21( இன்று) முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. கண்ணூர் – கோவை ரயில், பாலக்காடு – கோவை இடையே இன்று பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயிலானது, கண்ணூரில் இருந்து பாலக்காடு வரை மட்டுமே இயக்கப்படும். இவ்வாறு ரயில்வே நிர்வாகம் கூறியுள்ளது.

மேலும் படிக்க