• Download mobile app
17 Mar 2026, TuesdayEdition - 3688
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

போதை பொருள் விவகாரத்தில் நடிகை முமைத்கான் நேரில் ஆஜர்

July 27, 2017 தண்டோரா குழு

போதைப் பொருள் விவகாரம் தொடர்பாக தெலுங்கு நடிகை முமைத்கான் இன்று ஆஜரானார்.

சமீபத்தில் போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன், தெலுங்கு திரையுலக நட்சத்திரங்களான நவ்தீப், சார்மி, முமைத்கான், இயக்குனர் பூரி ஜெகன்னாத் உள்ளிட்டோருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது.இதனையடுத்து இதில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பி அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் நடிகை முமைத்கான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டிருந்தார். மேலும், விசாரணைக்கு வர சொல்லி தனக்கு எந்த நோட்டீஸூம் வரவில்லை என கூறியிருந்தார்.

இதனையடுத்து பிக் பாஸ் நிர்வாகத்தினருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதனை தொடர்ந்து நேற்று இரவு முமைத்கான் பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.இந்நிலையில் இன்று காலை நடிகை முமைத்கான் விசாரணைக் குழு முன் ஆஜரானார்.

மேலும் படிக்க