• Download mobile app
28 Mar 2024, ThursdayEdition - 2969
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

போக்குவரத்து பயிற்சி பூங்காவின் 7வது ஆண்டுவிழா கொண்டாட்டம்

January 13, 2023 தண்டோரா குழு

ஹோண்டா மோட்டார் சைக்கிள் அண்டு ஸ்கூட்டர் இந்தியா மற்றும் கோயம்புத்தூர் நகர காவல் துறையினர், பாதுகாப்பான சவாரி பழக்கம் மற்றும் பொறுப்பான வாகனம் ஓட்டும் கலாச்சாரத்தை வளர்க்கும் வகையில், கோயம்புத்தூர் பாலசுந்தரம் சாலையில் உள்ள அதன் போக்குவரத்துப் பயிற்சிப் பூங்காவின் ஏழாவது ஆண்டு விழாவைக் கொண்டாடினர்.

வி.பாலகிருஷ்ணன்,ஐபிஎஸ் (காவல்துறை ஆணையர், கோயம்புத்தூர் நகரம், தமிழ்நாடு) மற்றும் ஹோண்டா மோட்டார் சைக்கிள் அண்டு ஸ்கூட்டர் இந்தியா நிறுவனத்தின் பிரதிநிதிகள் ஆகியோரின் முன்னிலையில் இந்த விழா நடைபெற்றது.

சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை அதிகரிக்க, எச்எம்எஸ்ஐ, கோயம்புத்தூர் நகரக் காவல் துறையுடன் இணைந்து தமிழகத்தின் முதல் போக்குவரத்துப் பயிற்சிப் பூங்காவை 2017 ஜனவரியில் கோவையில் துவங்கி வைத்தது. சிறு நகர கருத்தை அடிப்படையாகக் கொண்ட இந்த போக்குவரத்து பூங்கா, போக்குவரத்து சிக்னல்கள், ஜீப்ரா கிராசிங்குகள் மற்றும் வேகத்தடைகள் போன்ற உண்மையான சாலை நிலைமைகளை உருவகப்படுத்துகிறது.

அதன் தொடக்கத்தில் இருந்து, எச்எம்எஸ்ஐ இன் சாலைப் பாதுகாப்பு பயிற்றுனர்கள் கோயம்புத்தூரில் உள்ள 2.6 லட்சத்திற்கும் அதிகமான மக்களுக்கு (1.6 லட்சத்திற்கும் அதிகமான குழந்தைகள் மற்றும் 1 லட்சத்திற்கும் அதிகமான புதிய மற்றும் ஏற்கனவே உள்ள ஆண் மற்றும் பெண் ஓட்டுனர்கள் உட்பட) அனைத்து வயதினருக்கும், அதன் தினசரி பயிற்சிகள் மூலம் வெற்றிகரமாக கற்பித்துள்ளனர்.

இந்த முயற்சி குறித்து கருத்து தெரிவித்த, ஹோண்டா மோட்டார்சைக்கிள் அண்டு ஸ்கூட்டர் இந்தியா நிறுவனத்தின் பிராண்ட் ரூ கம்யூனிகேஷன் இயக்க அதிகாரி பிரபு நாகராஜ்,

“ஒரு சமூக உணர்வுள்ள நிறுவனமாக, எச்எம்எஸ்ஐ ஒரு நேர்மறையான மாற்றத்தை கொண்டு வர பாதுகாப்பான ரைடிங் நடத்தைகளை தொடர்ந்து ஊக்குவிக்கிறது. கோயம்புத்தூர் போக்குவரத்தின் உணர்திறனை உணர்ந்து, கோயம்புத்தூர் நகர காவல்துறையுடன் இணைந்து, நகரில் இந்த போக்குவரத்து பயிற்சி பூங்காவைத் திறந்து வைத்தோம். இன்று பாலசுந்தரத்தில் உள்ள இந்த போக்குவரத்து பயிற்சி பூங்கா, நகரத்தில் வசிக்கும் 2.6 மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு கற்பித்துள்ளது என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்.

சாலை மோதல்களைக் குறைக்கவும் தடுக்கவும் சாலைப் பயனர் நடத்தை மாற்றங்கள் அவசியமாக இருக்கிறது. எல்லா வயதுப் பிரிவு பங்கேற்பாளர்களுக்கும் பயிற்சி அளிக்கும் எங்கள் பயிற்சித் திட்டங்களின் மூலம், கோயம்புத்தூர் குடியிருப்பாளர்ளை, பொறுப்பான சாலைப் பயனாளிகளாக மாற்றுவதற்கு, அவர்களுக்குள் அதிக ஒழுக்கத்தை தொடர்ந்து ஏற்படுத்துவோம்” என்று கூறினார்.

ஹோண்டா மோட்டார்சைக்கிள் அண்டு ஸ்கூட்டர் இந்தியாவின் சாலைப் பாதுகாப்பிற்கான சிஎஸ்ஆர் அர்ப்பணிப்பு: ஏப்ரல் 2021 இல் அறிவித்தபடி, “2050 ஆம் ஆண்டுக்குள் ஹோண்டா மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஆட்டோமொபைல்கள் சம்பந்தப்பட்ட பூஜ்ஜிய போக்குவரத்து மோதல் இறப்புகளுக்கு ஹோண்டா பாடுபடும்”. 2001 இல் நிறுவப்பட்டதில் இருந்து, எச்எம்எஸ்ஐ அதன் நிறுவன சமூகப் பொறுப்பின் ஒரு பகுதியாக இந்தியாவில் சாலைப் பாதுகாப்பை மேம்படுத்தி வருகிறது. ஹோண்டாவின் உலகளாவிய பாதுகாப்பு நோக்கத்தை உணர்ந்து செயல்படும் வகையில், இன்று எச்எம்எஸ்ஐ இன் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முயற்சி ஏற்கனவே 50 இலட்சத்திற்கும்

அதிகமான இந்தியர்களிடம் பரவியுள்ளது. இந்தியா முழுவதும் அதன் 10 தத்தெடுக்கப்பட்ட போக்குவரத்து பூங்காக்கள் மற்றும் 7 பாதுகாப்பு ஓட்டுநர் கல்வி மையங்களில், அதன் திறமையான பாதுகாப்பு பயிற்றுனர்களின் குழு தினசரி நிகழ்ச்சிகளை நடத்துகிறது.

இது மட்டுமின்றி, இந்தியா முழுவதும் உள்ள எச்எம்எஸ்ஐ இன் அனைத்து 1000 க்கும் மேற்பட்டடீலர்ஷிப்களும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை பரப்புகின்றன. எச்எம்எஸ்ஐ இன் தனியுரிம விர்ச்சுவல் ரைடிங் சிமுலேட்டர், ரைடர்களின் ஆபத்து-முன்கணிப்பு திறனை அதிகரிக்கிறது; புதிய வாடிக்கையாளர்களுக்கும் இந்தியா முழுவதும் உள்ள ஒவ்வொரு டீலர்ஷிப்பிலும் சவாரி செய்யத் தொடங்கும் முன், அவர்களுக்கு டெலிவரிக்கு முந்தைய பாதுகாப்பு ஆலோசனை வழங்கப்படுகிறது.

கூடுதலாக, புதிய இயல்பில் கற்றல் நின்றுவிடாது என்பதை உறுதிசெய்யும் வகையில், எச்எம்எஸ்ஐ, ஹோண்டா ரோடு சேஃப்டி இ-குருகுல் என்ற டிஜிட்டல் சாலைப் பாதுகாப்புக் கல்வித் திட்ட முன்முயற்சியை தொடங்கியது. மே 20 இல் அதன் தொடக்கத்திலிருந்து, இந்த முன்முயற்சி 8 லட்சத்திற்கும் அதிகமான இந்தியர்களுக்கு விழிப்புணர்வு மற்றும் பொறுப்பான சாலைப் பயனாளர்களாக இருப்பதன் முக்கியத்துவத்தை உணர்த்தியுள்ளது.

மேலும் படிக்க