• Download mobile app
07 Feb 2026, SaturdayEdition - 3650
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பொள்ளாச்சி விவகாரம் திருநாவுக்கரசர் வீட்டில் 2 வது நாளாக சோதனை

March 15, 2019 தண்டோரா குழு

பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகளை ஆபாசப் படம் எடுத்து மிரட்டி பாலியல் தொல்லை செய்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. சிபிசிஐடி காவல்துறையினர் நேற்று முதல் பொள்ளாச்சி முகாமிட்டு பல்வேறு இடங்களில் சோதனை நடத்திய விசாரணை மேற்கொண்டுள்ளனர்.நேற்று இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசு பண்ணை வீட்டில் ஆய்வு செய்த சிபிசிஐடி காவல்துறையினர்இரண்டாவது நாளாக இன்று மாக்கினாம்பட்டியில் உள்ள திருநாவுக்கரசு வீட்டிற்கு இன்று வந்த சிபிசிஐடி எஸ்பி நிஷா பார்த்திபன் உள்ளிட்ட காவல்துறையினர் வீட்டிலிருந்து அவரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

சோதனையில் வீட்டில் இருந்த லேப்டாப் மற்றும் ஆவணங்களை ஆய்வு மேற்கொண்டனர். இந்த சோதனையில் முக்கிய தடயமாக இருந்த லேப்டாப் மற்றும் பென்ட்ரைவ் ஆகியவை கைப்பற்றியதாக கூறப்படுகிறது. மேலும் இந்த வழக்கு சம்பந்தமாக திருநாவுக்கரசிடம் நட்பாக பழகிய நண்பர்களிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை செய்வதாக தெரிகிறது. திருநாவுக்கரசு வீட்டில் சிபிசிஐடி காவல்துறையினர் நடத்திய சோதனையில் போது அக்கம் பக்கத்தினர் திரண்டனர் இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் படிக்க