• Download mobile app
26 Mar 2026, ThursdayEdition - 3697
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பொள்ளாச்சி பாலியல் வழக்கு: ஆவணங்களை சிபிஐயிடம் ஒப்படைத்தது சிபிசிஐடி

April 29, 2019 தண்டோரா குழு

பொள்ளாச்சி பாலியல் கொடூர வழக்கு தொடர்பான ஆவணங்களை சிபிஐயிடம் சிபிசிஐடி ஒப்படைத்தது

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இளம்பெண்களை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்து, அதனை வீடியோ எடுத்து மிரட்டிய வழக்கில், திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமாா், மணி உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

பொள்ளாச்சியில் இளம்பெண்களை பாலியல் துன்புறுத்தல் செய்த வழக்கில் சதீஷ், சபரி ராஜன், திருநாவுக்கரசு, வசந்த குமார், மணிவண்ணன் ஆகியோர் கைது செய்யப்பட்டு சி.பி.சி.ஐ.டி. விசாரணையின் கீழ் உள்ளனர். தமிழகத்தையே உலுக்கிய இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரித்த நிலையில் சி.பி.ஐ.க்கு மாற்ற தமிழக அரசு பரிந்துரைத்தது.

எனினும் கடந்த 26ம் தேதி வரை இவ்வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வந்தனர்.இதையடுத்து, பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து சி.பி.ஐ. விசாரணையை தொடங்கியது.

இந்நிலையில்,இந்த வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் பெற்ற வாக்குமூலம் மற்றும் விசாரணை ஆவணங்களை சிபிஐயிடம் ஒப்படைத்தனர்.

மேலும் படிக்க