• Download mobile app
10 Apr 2026, FridayEdition - 3712
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பொள்ளாச்சி பகுதியில் கேரள லாட்டரி சீட்டுகளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது

November 17, 2024 தண்டோரா குழு

பொள்ளாச்சி பகுதியில் சட்டத்திற்கு விரோதமாக தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கேரள லாட்டரி சீட்டுகளை விற்பனைக்கு வைத்திருந்த நபரை கைது செய்த கோவை மாவட்ட காவல்துறையினர்.

கோவை மாவட்டத்தில் நடைபெறும் சட்டவிரோத செயல்களை தடுக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.K.கார்த்திகேயன்,முனைப்புடன் செயல்பட்டு வருகிறார்.அதன் அடிப்படையில் இன்று (17.11.2024) பொள்ளாச்சி தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கேரளா லாட்டரி சீட்டுகளை விற்பனைக்கு வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் பொள்ளாச்சி தாலுகா காவல் நிலைய காவ‌ல்துறை‌யின‌ர் சம்பவம் இடமான கோபாலபுரம் சோதனை சாவடி அருகே சென்று சோதனை மேற்கொண்ட போது கேரளா லாட்டரி சீட்டுகளை விற்பனைக்கு வைத்திருந்த வால்பாறை பகுதியைச் சேர்ந்த ராமலிங்கம் மகன் சந்திரசேகரன் (46) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து சுமார் ரூபாய் 1,74,000 /- மதிப்புள்ள 4800 No’s தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கேரளா லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்து
மேற்படி நபரை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.

சட்டத்திற்கு புறம்பாக குற்ற செயல்களில் யாரேனும் ஈடுபட்டால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் எச்சரித்துள்ளார்.

குற்றங்களை தடுத்திட பொதுமக்கள் அச்சம் கொள்ள வேண்டாம். தயங்காமல் அழைத்திடுங்கள் கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 94981-81212 மற்றும் வாட்சப் எண் 77081-00100 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்போரின் ரகசியங்கள் காக்கப்படும்.

மேலும் படிக்க