• Download mobile app
26 Mar 2026, ThursdayEdition - 3697
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பொள்ளாச்சியில் திடீரேன ஏற்பட்ட சூறாவளி சுழலால் மக்கள் அச்சம்

April 5, 2019 தண்டோரா குழு

பொள்ளாச்சி உடுமலை ரோட்டில் திடீரேன ஏற்பட்ட சூறாவளி சுழலால் மக்கள் அச்சமடைந்தனர்.

பொள்ளாச்சி உடுமலை ரோட்டில் தனியாருக்கு சொந்தமான இடம் முன் நேற்றுமுன்தினம் மாலை நேரம் பொதுமக்கள் நடமாடும் பகுதியில் திடீர் என்று சூறாவளி சுழல் சிறிய அளவில் ஆரம்பித்து மளமளவான வானத்தை முட்டும் அளவிற்க்கு சுழல் சுழன்றது. பாம்பு போல் மேலே சென்றதை கண்டு பொதுமக்கள் அச்சத்துடனும், ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.

இதையடுத்து காற்றின் வேகம் திசை மாறியதால் சுழல்கலைந்து போனது. இதை மொபைலில் படம் பிடித்த பொதுமக்கள் வாட்ஸ் அப் மற்றும் பேஸ்புக்கில் பதிவு செய்தும் பகிரபட்டு லைக்குகள் அள்ளுகிறது. இம்மாதிரியான சுழலுக்கு ஆங்கிலத்தில் டெர்னேடோ என பெயர் தமிழில் சூறாவளி எனப் பெயர். இம்மாதிரியான சுழல் அமெரிக்கா போன்ற நாடுகளில்தான் அதிகம் ஏற்படும் கடந்த சில தினங்கள் முன்பு பொள்ளாச்சி போக்குவரத்து அலுவலகத்தில் இது போன்ற சூறவாளி ஏற்பட்டது குறிப்பிடதக்கது.

மேலும் படிக்க