• Download mobile app
02 Jun 2026, TuesdayEdition - 3765
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையின் நூற்றாண்டு விழா பேரணி

October 31, 2022 தண்டோரா குழு

தமிழகத்தில் பொது சுகாதாரத்துறை கடந்த 1922-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதன் நூற்றாண்டு விழா தற்போது மாநிலம் முழுவதும் கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், சென்னையில் கடந்த 10-ந் தேதி தொடங்கி வைக்கப்பட்ட நூற்றாண்டு விழா ஜோதி, அனைத்து மாவட்டங்களுக்கும் பயணிக்கிறது.

இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு இந்த ஜோதி வந்தடைந்தது. இதனை தொடர்ந்து பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் மக்கள் சேவையில் நூற்றாண்டு விழா ஜோதியுடன் கூடிய பேரணி ஆட்சியர் அலுவலகத்தில் துவங்கியது.

மாவட்ட வருவாய் அலுவலர் லீலா அலெக்ஸ் மற்றும் மாவட்ட பொது சுகாதார துறை இயக்குனர் அருணா ஆகியோர் கொடி அசைத்து துவக்கி வைத்த பேரணி சுகாதாரம் மற்றும் மருத்துவம் குறித்த பதாகைகள் ஏந்தியபடி ரேஸ்கோர்ஸ் வரை சென்றடைந்தது. முடிவில் செவிலியர்கள் மற்றும் மருத்துவத்துறை அலுவலர்கள் இசைக்கேற்றபடி நடனமாடி நூற்றாண்டு விழாவை கொண்டாடி மகிழ்ந்தனர்.

மேலும் படிக்க